கரூரில் தூர்வாரும் பணியினை துவக்கி வைத்த ஆட்சியர் பிரபு சங்கர்
நீர்வளத் துறையின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் த.பிரபு , செம்படபாளையம் கிராமத்தில் உள்ள பாப்புலர் முதலியார் வாய்க்காலை சிறப்பு தூர் வாரும் பணியினை துவக்கி வைத்து பார்வையிட்டார்கள்.

நீர்வளத் துறையின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.த. பிரபு சங்கர், செம்படபாளையம் கிராமத்தில் உள்ள பாப்புலர் முதலியார் வாய்க்காலை சிறப்பு தூர் வாரும் பணியினை துவக்கி வைத்து பார்வையிட்டார்.
கரூர் மாவட்டம், நீர்வளத் துறையின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.த.பிரபுசங்கர் , புகளூர் வட்டம், செம்படபாளையம் கிராமத்தில் உள்ள பாப்புலர் முதலியார் வாய்க்கால் ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணியினை துவக்கி வைத்து பார்வையிட்டார்.

தூர் வாரும் பணியினை துவக்கி வைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவிக்கையில்,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் டெல்டா மாவட்டங்களை அனைத்து பாசன வாய்க்கால்களையும் இந்த சிறப்பு தூர்வாரும் திட்டப்பணிகள் 2023-24 திட்டத்தின் கீழ் இன்று கரூர் மாவட்டத்தில் தூர்வாரும் பணிகளை துவக்கி வைக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தை பொருத்தவரை 147.33 கி.மீ அளவிற்கான பாசன வாய்க்கால்களை ரூ.6.48 கோடி செலவிலான 38 பணிகள் எடுக்கப்பட்டு இந்த தூர்வாரம் பணிகள் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகள் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பதற்கு முன்பதாகவே மே -31-க்கு முன்னதாகவே பணிகளை முடிப்பதற்கு இந்த திட்டமிடப்பட்டு இந்த பணிகள் மாவட்டம் முழுவதும் இன்று நடைபெறுகின்றன.

இந்த திட்டங்களை விரைந்து செயல்படுத்துவதன் மூலம் கரூர் மாவட்டத்தில் மட்டும் புகளூர் வாய்க்கால், நெரூர் வாய்க்கால், வாங்கல் வாய்க்கால் மற்றும் பாப்புலர் முதலியார் வாய்க்கால் போன்ற வாய்க்கால் மூலம் 11000 க்கு மேற்பட்ட ஏக்கர் மற்றும் திருச்சி, புதுக்கோட்டை மாவட்டத்தில் மேற்பட்ட விவசாய விலை நிலங்கள் பயன்பெற உள்ளன. இந்த தூர்வாரும் பணிகள் திட்டங்களை கண்காணிப்பதற்காக நீர்வளத்துறை கூடுதல் செயலாளர் அவர்கள் சிறப்பு செயலி ஒன்றினை அறிமுகப்படுத்தி ஒவ்வொரு நாளும் பணிகள் முன்னேற்றம் குறித்து அந்த செயலி மூலம் பதிவிடுவதால் பணிகளை துல்லியமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், உழவர் நலக்குழு மூலமாக ஒவ்வொரு பணிக்கும் 5 அதிகாரிகள் வேளாண்துறை, வருவாய்த்துறை, ஊரகவளர்ச்சித்துறை போன்ற பல்வேறு துறைகள் சேர்ந்த அலுவலர்கள் மற்றும் அந்த இடத்தைச் சார்ந்த வேளாண் பெருமக்களையும் சேர்த்து உழவர் குழு மூலமாகவும் சரியாக பணிகள் நடைபெறுவதையும், பணிகளை தரமாக நடைபெறுகிறதா என்பது குறித்தும் கண்காணிக்கப்பட்டு பணிகளை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலமாக பாசன வாய்க்கால் மீண்டும் பொலிவு பெற்று அந்த பாசன நிலங்கள் சரியான காலத்தில் பாசன வசதிகளை விவசாயிகள் பெறுவார்கள் என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.த.பிரபுசங்கர் அவர்கள் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு..ம.கண்ணன், உதவி செயற்பொறியாளர் (திருச்சி ஆற்று பாதுகாப்பு கோட்டம்) திரு.சிங்காரவேலு, உதவி பொறியாளர் திரு.கார்த்திக், கரூர் வருவாய் கோட்டாட்சியர் ரூபினா, மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.





















