மேலும் அறிய

கரூரில் 9 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்களை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

கரூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கை மனுக்கள் மீது கனிவுடனும், விரைவாகவும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 9 மாற்றுத்திறனாளி நபர்களுக்கு ரூ.10  லட்சத்து 87 ஆயிரத்து 500 மதிப்பிலான செயற்கை கால்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் வழங்கினார்.

கரூரில் 9 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்களை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

கரூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கை மனுக்கள் மீது கனிவுடனும், விரைவாகவும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் விபத்து மற்றும் பிற காரணங்களால் கால்கள் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் சிரமப்பட்டு வந்த 9 மாற்றுத்திறனாளி நபர்களின் கோரிக்கையை ஏற்று மாண்புமிகு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சத்து 87 ஆயிரத்து 500 மதிப்பிலான செயற்கை கால்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

இந்நிகழ்வின் போது சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துறை ஆட்சியர்சைபுதீன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி ஆகியோர் உடன் இருந்தனர்.

கரூரில் 9 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்களை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

நகர் ஊரமைப்பு இயக்கத்தின் எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதிகளில் 01.01.2011-க்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்களுக்கு இத்துறையால் இசைவு வழங்கும் திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் அரசாணை எண்.76, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி(ந.வ3) துறை, நாள்.14.06.2018 -ல் வெளியிடப்பட்டன.

இத்திட்டத்தின் கீழ் நிகழ்நிலை(Online) –ல் 14.06.2018 முதல் 13.09.2018 வரை மூன்று மாத காலத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு இசைவு வழங்குவதற்கு சென்னை உயர்நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி ரிட் மேல்முறையீட்டு மனுக்கள் எண்.233/2019  மற்றும் பலவற்றில் வழங்கப்பட்டுள்ள 10.02.2021 தேதிய தீர்ப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நீதிமன்ற உத்தரவின்படி 22.03.2021 முதல் 04.04.2021 வரை இருவார காலத்திற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மீண்டும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கும் விதமாக விண்ணப்பம் சமர்ப்பிக்க மேலும் ஆறு மாத காலம் கால நீட்டிப்பு அரசால் 24.06.2022 முதல் 31.12.2022 வரை வழங்கப்பட்டது.

கரூரில் 9 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்களை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

தற்பொழுது இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு மற்றுமொரு வாய்ப்பாக 30.06.2023 வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்தவர்கள் உரிய விபரங்களை சமர்ப்பித்து இசைவு பெற சம்பந்தப்பட்ட மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகங்களை அணுகலாம். இத்திட்டதின்கீழ் விண்ணப்பிக்க விரும்புவர்கள்  https://tcp.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகின்றது. இது ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் அரிய வாய்ப்பு என்பதால் இதனை தவறாது பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்

தலைப்பு செய்திகள்

தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
சிந்தாமணி ஸ்டேஷனில் லாக்கப் மரணம்? “தவெக ஆட்சியில் தொடரும் கொடூரம்” - டிடிவி தினகரன் கொந்தளிப்பு
சிந்தாமணி ஸ்டேஷனில் லாக்கப் மரணம்? “தவெக ஆட்சியில் தொடரும் கொடூரம்” - டிடிவி தினகரன் கொந்தளிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
"எஸ்.ஐ மேலேயே கைய வச்சியா?" - பளார் விட்ட தஞ்சை இளைஞரின் கதி என்ன? என்னென்ன பிரிவுகளில் கேஸ்?
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
Embed widget