கரூர்: வீணாக கடலில் கலக்கும் காவிரி நீர்; அரசுக்கு பஞ்சாயத்து தலைவர் வைத்த கோரிக்கை
காவிரியில் வீணாகச் செல்லும் தண்ணீரை, மேற்கண்ட வெள்ளியணை குளம் அருகிலேயே திண்டுக்கல் பூட்டு குடிநீர் திட்டத்திற்கு, ராட்சத குழாய் மூலம் இரண்டு பைப் லைன்கள் செல்கிறது.
வீணாகச் செல்லும் காவிரி தண்ணீரை பெரியகுளத்துக்கு திருப்பிவிட வேண்டும் என்று வெள்ளியணை பஞ்சாயத்து தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக வெள்ளியணை ஊராட்சித் தலைவர் சுப்ரமணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு, இயற்கையின் வரப்பிரசாதமாக காவிரி, பவானி, அமராவதி ஆகிய நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில் 100 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. இதை முறையாக திருப்பி வறட்சி பகுதியில் பயன்படுத்தினால், நூற்றுக்கணக்கான ஏரி, குளங்கள் நிரம்பும். லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறும். கோடிக்கணக்கான மக்கள் பயன்பெறுவார்கள். நாட்டின் பொருளாதாரம் மேம்படும்.
இதன்படி இப்போது, வெள்ளியணை அருகில் உள்ள பெரிய குளம் 400 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் 0.60 டிஎம்சி தண்ணீர் கொள்ளளவு கொண்டது. இந்த குளத்தில் தண்ணீர் வந்தால், 50 கிலோமீட்டர் தொலைவிற்கு குடிநீர் ஆதாரமும், விவசாய நிலங்களில் உள்ள போர்வெல் கிணறுகளில் நீர்மட்டமும் உயரும்.
இப்போது காவிரியில் வீணாகச் செல்லும் தண்ணீரை, மேற்கண்ட வெள்ளியணை குளம் அருகிலேயே திண்டுக்கல் பூட்டு குடிநீர் திட்டத்திற்கு, ராட்சத குழாய் மூலம் இரண்டு பைப் லைன்கள் செல்கிறது. இதை ஒருநாள் மட்டும் (24 மணி நேரம்) குலத்திற்கு முறையாக திருப்பிவிட்டு குளத்தை நிரப்பலாம். இப்பணியை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியமும், பொதுப்பணி துறையும் இணைந்து செயல்படுத்திட வேண்டும். இதற்கு அதிகபட்சம் ஒரு லட்சம் முதல் 2 லட்சம் வரை மட்டுமே செலவாகும். இந்த செலவை அரசு ஏற்று ஒரு முன்னோட்டமாக செயல்படுத்தலாம். இதனால் அரசுக்கும், அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் நற்பெயர் கிடைக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்