கரூர்: அமராவதி அணையின் தண்ணீர் வரத்து நிலவரம்.
டெல்டா பாசன சம்பா சாகுபடி பணிக்காக காவிரி ஆற்றில் 15 ஆயிரத்து, 646 கன அடி தண்ணீரும், நான்கு பாசன கிளை வாய்க்கால்களில் வினாடிக்கு 1,120 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.
காவிரியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு
காவிரி ஆற்றில் மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு, 11 ஆயிரத்து, 640 கன அடி தண்ணீர் வந்தது. காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு, 16 ஆயிரத்து, 766 கனஅடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. டெல்டா பாசன சம்பா சாகுபடி பணிக்காக காவிரி ஆற்றில் 15 ஆயிரத்து, 646 கன அடி தண்ணீரும், நான்கு பாசன கிளை வாய்க்கால்களில் வினாடிக்கு 1,120 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.
அமராவதி அணையின் தண்ணீர் வரத்து நிலவரம்.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு காலை நிலவரப்படி வினாடிக்கு, 1,243 கன அடி தண்ணீர் வந்தது. காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு, 955 கன அடி தண்ணீர் வரத்து குறைந்தது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 87.96 கன அடியாக இருந்தது. அமராவதி அணையில் இருந்து, ஆற்றில் வினாடிக்கு, 650 கன அடி தண்ணீரும், புதிய பாசன வாய்க்கால்களில் 313 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.
கரூர் அருகே, பெரியாண்டாங்கோவில் தடுப்பணைக்கு 2 ஆயிரத்து, 850 கன அடி தண்ணீர் வந்தது. ஆனால், இப்பொழுது ஆற்று பகுதிகளில் மழை குறைவால், காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 2 ஆயிரத்து 713 கன அடி தண்ணீர் வரத்து குறைந்தது.
நங்காஞ்சி அணையின் நீர்மட்டம்.
திண்டுக்கல் மாவட்டம், நங்காஞ்சி அணைக்கு வடகாடு மலைப் பகுதிகளில் மழை காரணமாக, காலை ஆறு மணி நிலவரப்படி வினாடிக்கு 69 கன அடி தண்ணீர் வந்தது. அந்த தண்ணீர் அப்படியே ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும், நான்கு பாசன கிளை வாய்க்கால்களில் வினாடிக்கு, தலா 10 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 39.37 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 39.32 அடியாக இருந்தது.
ஆத்து பாளையம் அணையின் நீர் நிலவரம்.
க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, காலை 6 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 26.17 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
பொன்னனியாறு அணையின் நீர்மட்டம்.
கடவூர் அருகே உள்ள பொன்னனியாறு அணைக்கு காலை நிலவரப்படி, வினாடிக்கு தண்ணீர் வரத்து இல்லை. 51 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 28.03 அடியாக உள்ளது.
கரூர் மாவட்டத்தில் பெரும்பால இடங்களில் மழை அளவு எதுவும் பதிவாகவில்லை இதனால் பாசன விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும், தமிழகத்தில் மீண்டும் புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ள நிலையில் கரூருக்கு மழை வருமா என்ற எதிர்பார்ப்புடன் விவசாயிகள் காத்திருப்பு.