கரூர் புத்தக திருவிழா 9ஆம் நாள் நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய ஜெயரஞ்சன், சு.கி.சிவம்
ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியாக பள்ளி மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் விவேகானந்தா யோகா பயிற்சி நிலையத்தின் யோகா நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
கரூர் புத்தக திருவிழா - 2022 - 9ஆம் நாள் நிகழ்ச்சியில் சிந்தனை அரங்கத்தில் மாநில திட்டக் குழு துணைதலைவர் முனைவர் ஜெ.ஜெயரஞ்சன் சிறப்புரையும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் “நல்ல காகிதம் செயவோம்” என்ற தலைப்பில் சிறப்புரையும் மற்றும் சுகி.சிவம் “எங்கோ பெய்த மழை” என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினார்கள். கரூர் மாநகராட்சி திருமாநிலையூர் புதிய பேருந்து நிலையம் அமைவிடத்தில் அமைக்கப்பட்ட மாபெரும் புத்தக திருவிழாவின் 9 - ஆம் நாள் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் த.பிரபுசங்கர் தலைமை வகித்தார்கள். கரூர் CII தலைவர் கே.வெங்கடேஷன் துணை தலைவர் செந்தில் சங்கர் தலைவர் Young Indian கரூர் ராகுல் சுப்பிரமணியம் உ.ப.தலைவர் Young Indian கரூர் R.அருண் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க, கரூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம், நூலகம் மற்றும் வாசகர் வட்டம் இணைந்து மாபெரும் புத்தக திருவிழா - 2022 (19.08.2022 முதல் 29.08..2022 வரை ) நடைபெறுகிறது. இந்த புத்தக திருவிழாவினை மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் V.செந்தில்பாலாஜி (19.08.2022) அன்று திறந்து வைத்து பார்வையிட்டார்கள். அதன் தொடர்ச்சியாக ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியாக பள்ளி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் விவேகானந்தா யோகா பயிற்சி நிலையத்தின் யோகா நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிந்தனை அரங்கத்தில் மாநில திட்டக் குழு துணைதலைவர் முனைவர் ஜெ.ஜெயரஞ்சன் சிறப்புரையும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்“நல்ல காகிதம் செயவோம்” என்ற தலைப்பில் சிறப்புரையும் மற்றும் சுகி.சிவம் “எங்கோ பெய்த மழை என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினார்கள்.
கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் பயிலக்கூடிய மாணவர்களில் சிறப்பான சாதனைகளை படைத்த மாணவ, மாணவியருக்கு சிறப்பு பரிசு வழங்கி, உற்சாகப்படுத்த ஒரு முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதில் இன்றைய நம்முடைய சிறப்பு விருந்தினர்கள் மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கினார்கள். முன்னதாக மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நல அலுவலர் சந்தியா வரவேற்றும், நிறைவாக கரூர் மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி பிரிவு) எ.சிவராமகிருஷ்ணராஜ் நன்றி தெரிவித்து பேசினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் எம்லியாகத், மாவட்ட ஊராக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், சமுக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் சைபுதீன், வருவாய் கோட்டாட்சியர்கள் ரூபினா (கரூர்), மாவட்ட வழங்கல் வலுவலர் தட்சிணாமூர்த்தி, மாமன்ற உறுப்பினர் வசுமதி, மாவட்ட புத்தகக் கண்காட்சி குழுவினர்,சரவணகுமார், சிவக்குமார், தங்கராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.