கரூர் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணி - 2044 வழக்குகள் பதிவு
எப் ஆர் எஸ் போஸ்ரெகக்னைஸ்டு சாப்ட்வேர் மூலம் 180 நபர்கள் சோதனை செய்யப்பட்டனர். தீவிர வாகன சோதனை மேற்கொண்டதில் 103 மதுபான பாக்கெட்டுக்களை கடத்த பயன்படுத்திய வாகனம் பறிமுதல் செய்தனர்
கரூர் மாவட்டத்தில் போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு சோதனை மேற்கொண்டதில் 2004 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம் முழுவதும் சிறப்பு ரோந்து பணியாக குற்றத்தடுப்பு மற்றும் வாகன விபத்து குறைப்பது தொடர்பாக கரூர் மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் உத்தரவின்படி, ஏடிஎஸ்பி தலைமையில் டிஎஸ்பி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் எஸ்ஐக்கள் மற்றும் போலீஸார்கள் மூலம் மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் மாவட்டத்தின் முக்கிய சந்திப்புகளில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டதில் 2044 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இதில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக 27 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது.
எப்ஆர்எஸ் போஸ்ரெகக்னைஸ்டு சாப்ட்வேர் மூலம் 180 நபர்கள் சோதனை செய்யப்பட்டனர். தீவிர வாகன சோதனை மேற்கொண்டதில் கர்நாடக மாநிலத்தில் இருந்து கடத்திவரப்பட்ட 103 மதுபான பாக்கெட் களையும் மதுபான பாக்கெட்டுக்களை கடத்த பயன்படுத்திய நான்கு சக்கர வாகனம் வாகனத்தையும் கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்
கர்நாடக மாநிலத்தில் இருந்து காய்கறி ஏற்றி வந்த ஈச்சர் வாகனத்தை வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட தவித்துப்பாளையம் பகுதி சோதனை சாவடியில் சோதனை செய்தபோது, அந்த வாகனத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி வந்த நபரையும், வேனையும் போலீசார் கைப்பற்றினர்.
கரூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் சம்பந்தமாக தனிப்படையினரால் சோதனை செய்ததில் 27 வழக்குகளும், 27 நபர்களும் கைது செய்யப்பட்டு, 6 கிலோ 682 கிராம் குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டது.
கரூர் மாவட்டத்தில் அனுமதியின்றி மதுபானங்களை விற்பனைக்காக வைத்திருந்த குற்றத்திற்காக 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 233 மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டு ,18 பேர் கைது செய்யப்பட்டனர். குற்றத்தடுப்பு மற்றும் ரவுடிகள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தொடர் சோதனை நடைபெறும் எனவும், வாகன விபத்துகளை தடுக்கும் வகையில் தொடர்ந்து வாகன சோதனை நடத்தப்படும் எனவும் மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் தெரிவித்துள்ளார்.
சேவல் சண்டை நடத்திய 5 பேர் கைது.
அரவக்குறிச்சி அருகே, சேவல் சண்டை நடத்தியதாக, ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி போலீஸ் எஸ்ஐ, திருநாவுக்கரசு உள்ளிட்ட போலீசார், வேலம்பாடி பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தடையை மீறி சேவல் சண்டை நடத்தியதாக பாப்பநாயக்கன்பட்டி ஜெயராமன், பார்த்திபன், சிவகுமார், பள்ளப்பட்டி ஆனந்தகுமார், சென்னை அரும்பாக்கம் பாலசுப்பிரமணி, ஆகிய ஐந்து பேரை அரவக்குறிச்சி போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து ஒரு சேவல், 1700 ரூபாய் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.