Cauvery: தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடக அரசு மறுப்பு; கூட்டத்தில் என்ன நடந்தது?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது
தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடக அரசு மறுப்புதாக, டெல்லியில் நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில், தெரிவித்துள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டம்:
தமிழ்நாடு, கர்நாடகா இடையே காவிரி நீர் பிரச்னை தீர்க்கப்படாத ஒன்றாகவே உள்ளது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி ஒழுங்காற்றுக்குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் காவிரி ஒழுங்காற்று குழு பெங்களூருவை தலைமையிடமாக கொண்டும், மேலாண்மை ஆணையம் டெல்லியை தலைமையிடமாக கொண்டும் செயல்பட்டு வருகிறது.
இதனிடையே கடந்த மார்ச் 21 ஆம் தேதி காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடந்தது. அதில் பெங்களூருவில் தாண்டவமாடும் குடிநீர் பற்றாக்குறையை போக்க காவிரியில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடகா மாநில அதிகாரிகள் வலியுறுத்தினார்கள். இதற்கு தமிழ்நாடு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை தமிழ்நாட்டுக்கு மாதத்துக்கு 2.8 டிஎம்சி வீதம் தண்ணீர் வழங்க வேண்டும் என கர்நாடகா அரசை ஒழுங்காற்று குழு கேட்டுகொண்டது.
இந்நிலையில் டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29வது கூட்டம் இன்று நடைபெற்ற்து. இந்த கூட்டமானது, ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழ்நாடு, கர்நாடக, புதுச்சேரி மற்றும் கேரள ஆகிய 4 மாநில அதிகாரிகளும் பங்கேற்றனர்.
நீரை திறக்க மறுப்பு:
கூட்டத்தில் , தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவித்ததாவது, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் 5 டி.எம்.சி-க்கு பதிலாக 1.5 டி.எம்.சி மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 3.6 டி.எம்.சி நீர் திறக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இதுறித்து கர்நாடக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டதாவது, தமிழ்நாடு அரசின் கோரிக்கியை ஏற்க முடியாது. நீர் இருப்பு மற்றும் சூழ்நிலையை கருத்தில் கொண்டே தண்ணீர் திறக்க முடியும் என திட்டவட்டமாக கர்நாடக அரசு தெரிவித்தது. மேலும், கர்நாடகாவில் வறட்சி நீடித்து வருவதாலும் உடனடியாக நீரை திறக்க முடியாது எனவும் கர்நாடக அரசு தெரிவித்தது.
Also Read: Borewell: 18 மணி நேர போராட்டம்.. ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை மீட்பு.. கர்நாடகாவில் திக் திக்!