மேலும் அறிய

கர்நாடகாவில் உள்ள திமுகவின் குடும்ப தொழில்கள் பாதிக்குமா? மேகதாது விவகாரத்தில் விளாசிய இபிஎஸ்!

தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு கர்நாடகாவில் உள்ள தொழில்கள் பாதிக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில், இந்த அரசு செயல்படுகிறதோ என்ற எண்ணம் தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

மேகதாதுவில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக பழனிசாமி வெளியிட்ட அறிக்கை:

கர்நாடக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில் காவேரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டுவது குறித்து விவாதிக்க, அனைத்துக் கட்சிக் கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. அங்கு நடைபெற்ற கூட்டத்தில், உடனடியாக காவேரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டவேண்டும் என்று ஒருமனதாக முடிவெடுத்துள்ளதாக செய்திகள்
தெரிவிக்கின்றன.

மேலும், மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் அவர்களை டெல்லியில் நேரில் சந்தித்து, கர்நாடகாவில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் முடிவினை எடுத்துக் கூறி, காவேரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு மத்திய அரசின் அனுமதியை உடனே வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்க முடிவு செய்துள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன. கர்நாடக அரசின் புதிய அணை கட்டும் முயற்சியை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

மேகதாதுவில் அணை கட்டுவதற்காக கர்நாடக அரசு இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. கர்நாடக அரசு மேகதாதுவில் அணையை கட்டுவதன் மூலம் தமிழகத்திற்கு
கிடைக்க வேண்டிய காவேரி நீருக்கு தடை ஏற்படும் என்பதை உணராத இந்த திமுக அரசு, மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ததற்கும், நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் குறித்தும் எந்தவிதமான எதிர்ப்பையும் தெரிவிக்காமல் வாய் மூடி மவுனமாக இருந்து தமிழக மக்களுக்கு துரோகம் இழைப்பதை எக்காரணம் கொண்டும் ஏற்க முடியாது

தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு கர்நாடகாவில் உள்ள தொழில்கள் பாதிக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில், இந்த அரசு செயல்படுகிறதோ என்ற எண்ணம் தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. மேகதாது அணை பிரச்சனையில் உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கை இந்த அரசு முறைப்படி நடத்தி, கர்நாடக அரசின் முயற்சிகளைத் தடுத்து நிறுத்த வேண்டும். அம்மாவின் அரசு காவேரி பிரச்சனையிலும், முல்லை பெரியாறு பிரச்சனையிலும், மேகதாது பிரச்சனையிலும் நடத்திய சட்டப் போராட்டங்களை, தொடர்ந்து இந்த அரசு எந்தவிதமான சமரசத்திற்கும் இடம் தராமல், மூத்த சட்ட வல்லுநர்களை நியமித்து தமிழகத்தின் உரிமையினை பாதுகாக்க வேண்டும் என்று இந்த அரசை வுலியுறுத்துகிறேன். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget