திமுக MLA-வை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் ; அமைச்சர் வேலுவை வெளுத்துவாங்கிய அன்புமணி
காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட அரசு பள்ளிகளை மூடுவது தமிழக அரசு மக்களுக்கு செய்யும் துரோகம் - அன்புமணி ராமதாஸ்

கள்ளக்குறிச்சி : கள்ளச்சாராய விற்பனைக்கு உடந்தையாக செயல்படும் ரிஷிவந்தியம் திமுக எம்எல்ஏ 'வசந்தம் கார்த்திகேயனை' டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் என்றும் காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட அரசு பள்ளிகளை மூடுவது தமிழக அரசு மக்களுக்கு செய்யும் துரோகம்; போதுமான ஆசிரியர்களை நியமித்தால் அரசு பள்ளிகளை நோக்கி மக்கள் வருவார்கள் என அன்புமணி ராமதாஸ் பேச்சு
தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் 100 நாட்கள் நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியில் நடைபயணம் மேற்கொண்ட அவர் தொண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின்னர் அன்புமணி மேடைப்பேச்சு: அரசு பள்ளியை உருவாக்குவது எவ்வளவு கடினமான விஷயம். அரசு பள்ளிகளை மூடுவது துரோகம். திமுக ஆட்சியில் 208 பள்ளிகளை மூடி இருக்கிறார்கள். கிராமங்களில் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது என்ற வினோத காரணத்தை சொல்கின்றனர்.
ரிஷிவந்தியம் திமுக எம்எல்ஏ 'வசந்தம் கார்த்திகேயனை' டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்- அன்புமணி ராமதாஸ் சூளுரை
கள்ளக்குறிச்சி என்று சொன்னாலே கள்ளச்சாராயம் தான் ஞாபகம் வருகிறது அந்த அளவிற்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு ஒரு அவர் பெயர் ஏற்பட்டுள்ளது. இந்த அவப்பெயரை நீக்க வேண்டுமானால் தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும். ரிஷிவந்தியத்தில் உள்ள திமுக எம்எல்ஏ டெபாசிட் இழக்க வேண்டும்...
ரிஷிவந்தியம் திமுக எம்எல்ஏவின் முதலாளி எ.வ. வேலு அவர் தனி ராஜ்ஜியம் நடத்தி வருகிறார். தமிழ்நாடு தங்களின் சொத்து என நினைத்து வருகிறார்கள். கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த உயிர்கள் போனதற்கு காரணம் திமுக... இந்த கள்ள சாராயம் காய்ச்சுவதற்கும் கொண்டு வந்து விற்பதற்கும் திமுக எம்எல்ஏக்கள் உறுதுணையாக இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் அமைச்சர் எ.வ. வேலு பாதுகாப்பு கொடுத்து வருகிறார்.
2026 சட்டமன்ற தேர்தலில் ஒரு ஓட்டுக்கு 5000 ரூபாய் கூட கொடுப்பார்கள் ஆனால் ஏமாந்து விடாதீர்கள்
தமிழகத்தில் போதை கலாச்சாரம் அதிகரித்துவிட்டது. முதலமைச்சர் தான் இதற்கு பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். என்னிடம் ஆட்சி இருந்தால் 6 மாதம் தேவையில்லை ஆறு நாட்களில் இந்த போதை பொருள் நடமாட்டத்தை ஒழித்து காட்டுவேன்.
கிராம சபை கூட்டங்களில் பொதுமக்கள் அதிக அளவில் பங்கேற்க அறிவுறுத்திய அன்புமணி.
பொதுமக்கள் அனைவரும் நாளை நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ளுங்கள் அங்கு சாதி வாரி கணக்கெடுப்பை தமிழக அரசு நடத்த வேண்டும் எனவும் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் தீர்மானத்தை நிறைவேற்றுங்கள்.
வருங்கால தலைமுறையை காப்பாற்ற வேண்டிய தேவை நமக்கு உள்ளது. அதற்கு இந்த திமுக ஆட்சியை அகற்ற வேண்டும். உங்களுடன் ஸ்டாலின் என முதலமைச்சர் அறிவித்துள்ளார் ஆனால் அவர் கார்ப்பரேட் பண முதலாளிகளுடன் தான் இருக்கிறார். விவசாயிகள் தொழிலாளர்கள் அரசு ஊழியர்கள் ஆகியோருடன் முதலமைச்சர் ஸ்டாலின் இல்லை...





















