Joy Crizildaa Vs Rangaraj: அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
ஜாய் கிரிசில்டாவின் குழந்தைக்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க வேண்டும் என்று கூறிய மாதம்பட்டி ரங்கராஜை, தைரியமிருந்தால் வாருங்கள் கணவரே என அழைப்பு விடுத்துள்ளார் கிரிசில்டா. அவரது பதிவு என்ன.?

நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றிவிட்டதாக வழக்கு தொடர்ந்துள்ள ஜாய் கிரிசில்டாவிற்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. இந்நிலையில், அந்த குழந்தைக்கு டிஎன்ஏ சோதனை செய்ய வேண்டும் என்று ரங்கராஜ் கூறியிருந்தார். ஆனால் தற்போது அதைப்பற்றி அவர் பேசாததால், தைரியமிருந்தால் வாருங்கள் கணவரே என ஜாய் கிரிசில்டா பதிவிட்டுள்ளார். அவரது பதிவு குறித்து தற்போது பார்க்கலாம்.
ஜாய் கிரிசில்டாவின் பதிவு என்ன.?
ஜாய் கிரிசில்டா தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "என் கணவர் மாதம்பட்டி ரங்கராஜை யாராவது பார்த்தால் தயவு செய்து DNA பரிசோதனைக்கு வர சொல்லுங்க. 15 நாள் ஆச்சு, இப்போ எங்க தலைமறைவா இருக்காரு.? உங்களுக்கு தைரியமும் நேர்மையும் இருந்தால் தயவு செய்து பரிசோதனைக்கு வாங்க கணவரே" என்று கூறியுள்ளார்.
View this post on Instagram
மாதம்பட்டி ரங்கராஜ் கூறியது என்ன.?
சமையல் கலை நிபுணரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்து, வழக்கும் தொடர்ந்தார். இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன் தனது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம், தனக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக ஜாய் கிரிசில்டா அறிவித்தார். மேலும், தன்னை இண்டாவது திருமணம் செய்துகொண்டதை மகளிர் ஆணையத்தின் முன்பாக மாதம்பட்டி ரங்கராஜ் ஒப்புக் கொண்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, அதற்கு பதிலளித்த மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டாவின் கூற்றை திட்டவட்டமாக மறுத்தார். மேலும், ஜாய் கிரிசில்டாவின் குழந்தைக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
அப்படி பரிசோதித்து, அதில் நான் தான் குழந்தைக்கு தந்தை என்று தெரியவந்தால், குழந்தையை கவனிக்கும் பொறுப்பை வாழ்நாள் முழுவதும் ஏற்கத் தயார் என்றும் மாதம்பட்டி ரங்கராஜ் கூறியிருந்தார்.
இந்த நிலையில்தான், தற்போது தைரியமிருந்தால் டிஎன்ஏ சோதனைக்கு வருமாறு மாதம்பட்டி ரங்கராஜை அழைத்துள்ளார் ஜாய் கிரிசில்டா. இதற்கு, ரங்கராஜ் என்ன செய்யப் போகிறார் என்பதே தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.





















