இதுபோன்ற சூழ்நிலையில், முதலில் மனதை அமைதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில், மன அழுத்தம் (Stress) எடுத்துக் கொள்வதால் சர்க்கரை அளவு மேலும் அதிகரிக்கலாம்.
உடனடியாக உங்கள் ரத்த சர்க்கரை அளவை மீண்டும் சரிபார்க்கவும். இதன் மூலம் அளவீட்டின் துல்லியத்தை உறுதிப்படுத்த முடியும்.
நீங்கள் இன்சுலின் எடுத்துக் கொண்டால், மருத்துவர் பரிந்துரைத்த 'சரியான டோஸ்'-ன்படி மட்டுமே இன்சுலின் எடுத்துக் கொள்ளுங்கள். நீங்களாகவே டோஸை அதிகரிக்கும் தவறை செய்யாதீர்கள்.
உயர் சர்க்கரை நீரிழப்பை ஏற்படுத்துகிறது. இந்த நேரத்தில் நிறைய சாதாரண தண்ணீர் குடியுங்கள்.
இனிப்பு பழச்சாறுகள், குளிர்பானங்கள், இனிப்புகள், அரிசி மற்றும் வெள்ளை ரொட்டி போன்ற ஸ்டார்ச் நிறைந்த உணவுகளை உடனடியாக சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
இந்த நேரத்தில், நீங்கள் சாலட், வெள்ளரிக்காய் மற்றும் புரதச்சத்து நிறைந்த லேசான உணவை எடுத்துக் கொள்ளலாம்.