IT Raids Saravana Store: சூப்பர் சரவணா ஸ்டோர்ஸில் வருமான வரிசோதனை.. பல குழுக்களாக பிரிந்து ரெய்டு!
கடந்த 2019ஆம் ஆண்டு ஏற்கெனவே சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் சோதனை நடத்தப்பட்ட நிலையில் தற்போது ரெய்டு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. புரசைவாக்கம், தியாகராய நகர், குரோம்பேட்டை, போரூரில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர்ஸில் ரெய்டு நடக்கிறது. வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு, கணக்கில் வராத முதலீடு ஆகியவை அடிப்படையில் வருமான வரி சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சோதனை நடைபெற்று கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடைக்கு வந்தவர்கள் பெருத்த ஏமாற்றத்துடன் திரும்ப சென்றனர். சிலர் பக்கத்தில் உள்ள கடைகளுக்கு சென்றனர். மேலும் படிக்க: Matchbox Price Hike: 14 ஆண்டுகளுக்குப் பின் விலை உயர்ந்த தீப்பெட்டி: இன்று முதல் ரூ.2க்கு விற்பனை!
கடந்த 2019ஆம் ஆண்டு ஏற்கெனவே சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் சோதனை நடத்தப்பட்ட நிலையில் தற்போது ரெய்டு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அப்போது நடைபெற்ற சோதனையில் சுமார் 434 கோடி ரூபாய் மதிப்பிலனா ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் படிக்க: Inflation: எகிறும் உதிரிப்பொருட்களின் விலை.. விடாமல் துரத்தும் பணவீக்கம்.. பாதிப்பு யார் யாருக்கு?
தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான கடைகளில் சரவணா ஸ்டோர்ஸ் ஒன்றாகும். செல்வ ரத்தினம் மற்றும் ராஜரத்தினத்திற்கு சொந்தமாக துணிக்கடை மட்டுமல்லாமல், நகைக்கடை, எலைட் சோரூம், மளிகைப் பொருட்கள் ஆகியவையும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. நடுத்தர வர்க்கத்தினருக்கு ஏற்ற கடையாக இருக்கிறது. இந்த கடைகளில் சோதனை நடைபெற்று வரும் செய்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. Gold-Silver Price, 1 December: தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்தது..!
மேலும் செய்திகள் படிக்க:
#Twitter அனுமதியின்றி புகைப்படங்கள் , வீடியோவை பகிர தடை -ட்விட்டரின் புதிய தனியுரிமை கொள்கை!https://t.co/rW6M7s84KK#Twitterhub #Permissions
— ABP Nadu (@abpnadu) December 1, 2021
இல்லத்தரசிகள் வீட்டில் இருந்து சம்பாதிக்கலாம்: சிறு தொழில் செய்ய சில டிப்ஸ்!https://t.co/cpMVKx0VqZ#HomeMakers #Work #Tips
— ABP Nadu (@abpnadu) December 1, 2021
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்