மேலும் அறிய

Jananayagan release: மே மாதம் தான் ரிலீஸ் ஆகுமா ஜனநாயகன்.!! விஜய் ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் புதிய தகவல்

Jananayagan release: நடிருகம் தவெக தலைவருமான விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் வெளியாகுவதில் சிக்கல் நீடித்து வருகிறது. அந்த வகையில், தேர்தலுக்கு பிறகு மே மாதம் தான் படம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

சிக்கலில் ஜனநாயகன்

தமிழ் திரைத்துறையில் முன்னனி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய், தமிழகம் முழுவதும் பல லட்சம் ரசிகர்களை கொண்ட விஜய், திரைத்துறையில் இருந்து அரசியலில் களம் இறங்கினார். கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கியவர், மதுரை மற்றும் விக்கிரவாண்டியில் இரண்டு மாநில மாநாட்டை நடத்தி அசத்தினார். மேலும் ஜனநாயகன் திரைப்படம் தான் தனது கடைசி திரைப்படம் எனவும் அறிவித்தார். இதனையடுத்து இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு ஏற்ப திரையரங்குகளிலும் ரசிகர்கள் பேனர்கள் வைத்தும், தோரணங்கள் கட்டியும் கொண்டாடினார்.

சென்சார் சிக்கலில் ஜனநாயகன்

ஆனால் படம் வெளியாவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக சென்சார் சான்றிதழ் கிடைக்காத நிலை உருவானது. இதனையடுத்து நீதிமன்றத்தில் படக்குழு முறையிட்ட நிலையில், அடுத்த இரண்டு நாட்களில் விசாரணை நடத்திய தனி நீதிபதி, படத்தை வெளியிட அனுமதி அளித்து உத்தரவிட்டார். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் சென்சார் குழு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிட்டது. இதன் காரணமாக பொங்கல் பண்டிகைக்கு படம் வெளியாகாத நிலை உருவானது. இதனையடுத்து கடந்த வாரம் வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று ஜனநாயகன் திரைப்படம் தொடர்பாக தீர்ப்பு வெளியிடப்பட்டது.

மீண்டும் தனி நீதிபதி விசாரிக்க உத்தரவு

அதில் தனி நீதிபதி அளித்த தீர்ப்பு செல்லாது எனவும், படத்தில் மதம் சார்ந்த காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த நீதிபதி, மீண்டும் தனி நீதிபதியே ஜனநாயகன் திரைப்படத்திற்கான விசாரணையை நடத்தி தீர்ப்பு வழங்க உத்தரவிடப்பட்டது. இதனால் தொடங்கிய இடத்திற்கே மீண்டும் ஜனநாயகன் படம் வந்துள்ளதால் படம் தற்போது உள்ள நிலையில் வெளியாக வாய்ப்பு குறைந்துள்ளது. எனவே அடுத்தாக தனி நீதிபதி விசாரணை நடத்தி உத்தரவிட குறைந்தது ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை ஆகும் என தகவல் தெரிவிக்கிறது.

இதனையடுத்து பிப்ரவரி மத்தியில் தீர்ப்பு வந்தாலும், இரண்டு தரப்பிலும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளது. அதையும் தாண்டி படம் வெளியாக அனுமதி கிடைத்தாலும் பிப்ரவரி மாதம் எந்தவித தொடர் விடுமுறை நாட்களும் இல்லை. அதிலும் பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வுக்கு மாணவர்கள் தயாராக தொடங்கிவிடுவார்கள். இதனால் ஜனநாயகன் திரைப்படத்தை வெளியிட முடியாத நிலை உருவாகியுள்ளது. அடுத்ததாக தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி மார்ச் மாதம் முதல் வாரம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மே மாதம் படம் ரிலீஸ் ஆக வாய்ப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தேர்தலில் போட்டியிடும் கட்சியின் தலைவர் படத்தை வெளியிடுவதில் சிக்கம் நீடிக்கும்.எனவே மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் இறுதி வரை படத்தை வெளியிடுவதற்கான வாய்ப்பு குறைந்துள்ளது. எனவே சட்டமன்ற தேர்தல் முடிவடைந்த பிறகு மே மாதம் பள்ளி விடுமுறை நாட்களில் தான் படத்தை வெளியிடுவதற்கான வாய்ப்பு உருவாகும் என கூறப்படுகிறது. எனவே ஜனநாயகன் திரைப்படத்தை பார்க்க இன்னும் 3 முதல் 4 மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
6 ல் இருந்து 17 வது இடத்திற்கு சறுக்கிய தமிழகம்.! இதான் உங்க லட்சணம் - விஜய்யை விளாசிய ஆர்.பி.உதயகுமார்!
6 ல் இருந்து 17 வது இடத்திற்கு சறுக்கிய தமிழகம்.! இதான் உங்க லட்சணம் - விஜய்யை விளாசிய ஆர்.பி.உதயகுமார்
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
விவசாயத்திற்கு மண் அள்றோம்.. பொய் சொல்லிட்டு சிவகங்கையில் என்ன வேலை பாக்குறாங்க தெரியுமா?
விவசாயத்திற்கு மண் அள்றோம்.. பொய் சொல்லிட்டு சிவகங்கையில் என்ன வேலை பாக்குறாங்க தெரியுமா?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Embed widget