Kalaignar Women's Assistance Scheme: ரூ.1000 மகளிர் உரிமை தொகை.. ஜூலை 24 ஆம் தேதி முதல் சிறப்பு முகாம்கள்.. மேயர் திட்டவட்டம்..
சென்னையில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற தகுதியான பெண்களை அடையாளம் காண ஜூலை 24 ஆம் தேதி முதல் சிறப்பு முகாம்கள் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற தகுதியான பெண்களை அடையாளம் காண ஜூலை 24 ஆம் தேதி முதல் சிறப்பு முகாம்கள் தொடங்க உள்ளதாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அறிவித்துள்ளார்.
2023-24 சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட கல்வித் துறை அறிவிப்புகளில் 12 அறிவிப்புகளை செயல்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்வு சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையி வளாக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், துணை மேயர் மகேஷ்குமார், ஆணையர் ராதாகிருஷ்ணன் மற்றும் ஏராளமான மாணவர்களும் ஆசிரியர்களும் பங்கேற்றனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா, தனியார் பள்ளிகளுக்கு நிகராக சென்னை பள்ளிகளும் செயல்பட வேண்டும் என்று நாள்தோறும் பல திட்டங்களை செயல்படுத்திய வருகின்றோம் அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் கல்வி செயல்பாட்டிற்காக 27 திட்டங்களை அறிவித்திருந்த நிலையில் அவற்றில் 12 திட்டங்கள் செயல்படுத்தப் பட்டுள்ளன. இரண்டு மாதங்களில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் அனைத்து மாணவர்களுக்கும் காலை சிற்றுண்டி உணவு திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் கூறினார். தொடர்ந்து பேசிய மேயர் பிரியா, சென்னை மாநகராட்சியில் மொத்தமாக 1415 ரேஷன் கடைகள் உள்ளது. இவற்றில் 500 பேருக்கு ஒரு தன்னார்வலர் என நியமித்துள்ளோம். சென்னையில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற தகுதியான பெண்களை அடையாளம் காண ஜூலை 24 ஆம் தேதி முதல் சிறப்பு முகாம்கள் தொடங்க உள்ளதாக அறிவித்தார். மேலும், கொடுங்கையூரில் பயோ மைனிங் திட்டத்தில் ஒரு பகுதியாக வெளிநாடுகளில் உள்ளதை போல குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்கும் முதலமைச்சரிடம் ஒப்புதல் பெற்றுள்ளதாக மேயர் பிரியா தெரிவித்தார்.
முன்னதாக, மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பப் பதிவுக்கான சிறப்பு முகாம்கள் நடத்த தமிழக அரசு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணிபுரியும் தன்னார்வலர்களை கொண்டு உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளன. தன்னார்வலர்கள் எந்தெந்த நியாய விலை கடைப்பகுதியில் வசிக்கிறார்கள் என்ற விவரம் விரைவில் வழங்கப்படும். தன்னார்வலர்கள் வசிக்கும் பகுதிக்கு 2 கிலோ மீட்டாருக்கு மிகாமல் அவர்களுக்கான பணி ஒதுக்கீடு செய்ய ஆணையிடப்பட்டது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் இருந்து பெறப்படும் தகவல்களைக் கொண்டு எவ்வித பணி ஓதுக்கீடுகளும் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், மாநில அலுவலகத்திலிருந்து தகவல்கள் பகிரப்படும் பொழுது கீழ்க்கண்ட நடைமுறைகளைப் பின்பற்றி தன்னார்வலர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.