மேலும் அறிய

International Tiger Day 2021: புலிகளின் அழிவு ஒரு வனத்தின் அழிவு - சர்வதேச புலிகள் தினத்தையொட்டி சீமான் அறிக்கை

புலிகள் எண்ணிக்கை குறைவதன் மூலம் மான்கள் உண்ணும் இத்தாவரங்களின் விழுக்காடு அதிகரிப்பதனால் வனப்பகுதியில் அது பெரும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என சீமான் தெரிவித்துள்ளார்

சர்வதேச புலிகள் பாதுகாப்பு தினத்தையொட்டி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் புலிகளின் அழிவென்பது ஒரு விலங்கினத்தின் அழிவல்ல; அது ஒரு வனத்தின் அழிவு என தெரிவித்துள்ளார்.

பல்லுயிர்ச்சூழலின் முக்கியக் கண்ணியாக விளங்கும் புலிகள் இன்றைக்கு அரிதான உயிரினமாக மாறிக் கொண்டிருக்கின்றன.

ஒரு வனத்தில் புலிகள் மிகுந்து இருக்கிறதென்றால், அவை வாழ்வதற்கேற்ற நீர், உணவு, பாதுகாப்பான வனம், உலவுவதற்கான பரந்த நிலம் யாவும் கிடைக்கப்பெறுவதாகப் பொருள் கொள்ளப்படுகிறது. புலிகளின் எண்ணிக்கையில் நிகழ்ந்தேறும் செங்குத்தான வீழ்ச்சி, தாவரவகையின் தொகை விழுக்காடு அழிய வழிவகுக்கும். புலிகள் எண்ணிக்கை குறைவதன் மூலம் மான்கள் உண்ணும் இத்தாவரங்களின் விழுக்காடு அதிகரிப்பதனால் வனப்பகுதியில் அது பெரும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். ஆகவே, உணவுச்சங்கிலியைக் காப்பாற்றுவதிலும், பல்லுயிர்ப்பெருக்கத்தைத் தக்க வைப்பதிலும் புலிகள் மிக முக்கியக் கண்ணியாக விளங்குகிறது. 

International Tiger Day 2021: புலிகளின் அழிவு ஒரு வனத்தின் அழிவு - சர்வதேச புலிகள் தினத்தையொட்டி சீமான் அறிக்கை

புலிகள் வாழ்வதற்கேற்ற சூழல் அற்றுப்போய் அவைகள் அழிவதன் மூலம் மிகப்பெரும் சூழலியல் பேரழிவை வனங்கள் எதிர்கொள்ள நேரிடும். இதனால், புலிகளைக் காக்க வேண்டியது பேரவசியமாகிறது. ஆகவே, பல்லுயிர்ப்பெருக்கத்திற்கும், சூழலியல் சமநிலைக்கும் பெரும்பங்காற்றும் புலிகளைக் காக்க அதிகப் புலிகளைப் பாதுகாக்கும் வனங்களை உருவாக்கி, அவைகள் வாழும் வனப்பரப்புகள் சுருக்கப்படுவதைத் தடுக்க வேண்டும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர்,  வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்

Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்

சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!

சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!

ABP Premium

வீடியோ

VCK Maanadu : ”பெண்கள் இருக்காங்க.. இப்படியா?” எல்லை மீறிய விசிகவினர்! நொந்து போன திருமாAmala supports Samantha : ’’அமைச்சர் மாதிரி பேசு..அரக்கி மாதிரி பேசாத’’வெளுத்து வாங்கிய அமலா!Ponmudi Angry : வாக்குவாதம் செய்த திமுககாரர்! கடுப்பான பொன்முடி!’’மைக்க குடு முதல்ல’’Anbil Mahesh Phone Call : ’’ IDEA இருந்தா சொல்லுப்பா’’அன்பில் மகேஷ் PHONE CALL!  இளம் விஞ்ஞானி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர்,  வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர், வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
"பிராமின்தான்.. ஆனா பீப் சாப்பிட்டாரு" சாவர்க்கர் குறித்து புயலை கிளப்பிய கர்நாடக அமைச்சர்!
"இந்துக்களின் மக்கள் தொகை குறைகிறது" தேர்தல் பரப்புரையில் சர்ச்சையை கிளப்பிய பிரதமர் மோடி!
Government School Student Innovation: அசத்தல் கண்டுபிடிப்பு... அரசு பள்ளி மாணவரிடம் ஆலோசனை கேட்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
அசத்தல் கண்டுபிடிப்பு... அரசு பள்ளி மாணவரிடம் ஆலோசனை கேட்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
Salem Suitcase Murder: சூட்கேஸில் இருந்த இளம்பெண் சடலம்...  விசாரணையில் அதிர்ச்சி தகவல்
சூட்கேஸில் இருந்த இளம்பெண் சடலம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்
Embed widget