TN Rains: மிக கனமழை எச்சரிக்கை வாபஸ்..! இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..
தமிழகத்தில் பல மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்த மிக கனமழை எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது.
தமிழகத்தில் பல மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்த மிக கனமழை எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் வெளியிட்ட அறிவிக்கையின் படி, இன்று (19-11-2022) காலை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையால், 20-11-2022 முதல் 22-11-2022 வரை மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று செய்தி வெளியீடு வழங்கப்பட்டது.
பின்னர் இன்று (19-11-2022) 3.00 மணி அளவில் வந்த இந்திய வானிலை ஆய்வு மைய அறிவிக்கையின்படி, பல்வேறு மாவட்டங்களில் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதால் பல்வேறு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் வழங்கிய மிக பல இந்நிலையில் இன்று (19-11-2022) காலை வருவாய் மற்றும் கனமழை எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டுவிட்டது. பேரிடர் மேலாண்மைத் துறையால் வழங்கப்பட்ட மிக கனமழை எச்சரிக்கைக்கான அறிவுரைகள் திரும்ப பெறப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு அரசு தயார் நிலையில் இருப்பதாக தகவல் தெரிவித்தது. அதன்படி,
- பெருநகர சென்னை மாநகராட்சிக்கு 17 கண்காணிப்பு அலுவலர்களும், இதர மாவட்டங்களுக்கு 43 கண்காணிப்பு அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- 1149 தேசிய பேரிடர் மீட்புப் படையினரும், 899 தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினரும் தயார் நிலையில் உள்ளனர்.
- 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள், 5093 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தற்போது தமிழகத்தில் பல மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்த மிக கனமழை எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அடுத்த மூன்று நாட்களுக்கு எங்கெல்லாம் மழை..?
20.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
21.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், சென்னை, இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
22.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.