மேலும் அறிய

Independence Day 2024: சுதந்திர தினவிழா; கரூரில் 21 பயனாளிகளுக்கு ரூ.1.52 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல்

சுதந்திர தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

இந்தியத் திருநாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் தேசியக்கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் அனைவரிடமும் சமத்துவம் நிலவும் வகையில் சமாதானப் புறாக்களையும், தேசிய கொடி வண்ணத்திலான வண்ண பலூன்களையும் பறக்கவிட்டார்கள்.

Independence Day 2024: சுதந்திர தினவிழா; கரூரில்  21 பயனாளிகளுக்கு ரூ.1.52 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல்

அதனைத்தொடர்ந்து காவல்துறை, தீயணைப்புத்துறை, வனத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மாநகராட்சி, நகராட்சிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, பொதுப்பணித்துறை, எரிசக்தி, துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளை சார்ந்த 250 நபர்களை பாராட்டி நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் வழங்கி கௌரவித்தார்.

Independence Day 2024: சுதந்திர தினவிழா; கரூரில்  21 பயனாளிகளுக்கு ரூ.1.52 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல்

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக 2 பயனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலியும், தோட்டக்கலைத் துறையின் சார்பாக மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிகளுக்கும், மாவட்ட தொழில் மையம் சார்பாக 2 பயனளிகளுக்கு தொழில் முனைவோர் மானிய கடன்களையும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பாக 2 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் காப்பீட்டு திட்ட பயன்களையும், மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பாக 2 பயனாளிகளுக்கு கல்வி கடன்களையும்,

Independence Day 2024: சுதந்திர தினவிழா; கரூரில்  21 பயனாளிகளுக்கு ரூ.1.52 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல்

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பாக 2 பயனாளிகளுக்கு தையல் இயந்திரம் மற்றும் சலவை பெட்டிகளையும், தாட்கோ சார்பாக ஒரு பயனாளிக்கு தொழில் முனைவோர் திட்ட மானிய கடனையும், கூட்டுறவு துறையின் சார்பாக 5 பயனாளிகளுக்கு சுய உதவி குழு கடன்களையும் மற்றும் வருவாய்த் துறையின் சார்பாக முதலமைச்சரின் விபத்து நிவாரண நிதி 3 பயனாளிகளுக்கும் என மொத்தம் 21 பயனாளிகளுக்கு ரூ.1,52,46,588 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.

Independence Day 2024: சுதந்திர தினவிழா; கரூரில்  21 பயனாளிகளுக்கு ரூ.1.52 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல்

2024 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் அரசு இசைப்பள்ளியின் வரவேற்பு நடனம், நகர்மன்ற குமரன் உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் தேசப்பற்று பாடல் நடனம், வாங்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் கோலாட்டம், கரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியர்களின் நாட்டுப்புற நடனம்,

Independence Day 2024: சுதந்திர தினவிழா; கரூரில்  21 பயனாளிகளுக்கு ரூ.1.52 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல்

வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவியர்களின் மேற்கத்திய நடனம், ஆண்டாள் கோயில் கிழக்கு புனித அந்தோணியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் தேசப்பற்று பாடல் நடனம் நடைபெற்றது. இந்தக் கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Syria War: போர் பதற்றம் - இந்தியர்கள் உடனே வெளியேறுங்கள், அந்த நாட்டிற்கு செல்ல வேண்டாம் -  மத்திய அரசு எச்சரிக்கை

TN Rain Update: தமிழ்நாட்டில் கனமழை ஓவரா? இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை மையம் அறிக்கை

"திருமாவுக்கு பிரஷர்.. அவர் மனசு இங்கதான் இருக்கு" உடைத்து பேசிய தவெக தலைவர் விஜய்!
Aadhav Arjuna: விஜய்யை ஐஸ் மழையில் நனைய வைத்த ஆதவ் அர்ஜூனா! விசிகவுக்கு டாடா?; டென்சனில் திருமா?

ABP Premium

வீடியோ

VIjay Aadhav Arjuna : விஜய்க்கு வேலைபார்க்கும் ஆதவ்?2026ல் விசிக யார் பக்கம்? திருமாவின் SILENT MODETVK Member Ganja Supply: TVK வின் சொர்ணாக்கா? கஞ்சா விபச்சாரம் அடிதடி! போதைக்கு அடிமையாகும் இளசுகள்?Thiruvarur: குழந்தைக்கு அரிய வகை நோய்! ஒரு ஊசி - ரூ.16 கோடி இரண்டாக உடையும் விசிக! குட்டையை குழப்பும் ஆதவ்.. கடுப்பில் விசிக சீனியர்ஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Syria War: போர் பதற்றம் - இந்தியர்கள் உடனே வெளியேறுங்கள், அந்த நாட்டிற்கு செல்ல வேண்டாம் -  மத்திய அரசு எச்சரிக்கை
Syria War: போர் பதற்றம் - இந்தியர்கள் உடனே வெளியேறுங்கள், அந்த நாட்டிற்கு செல்ல வேண்டாம் - மத்திய அரசு எச்சரிக்கை
TN Rain Update: தமிழ்நாட்டில் கனமழை ஓவரா? இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை மையம் அறிக்கை
TN Rain Update: தமிழ்நாட்டில் கனமழை ஓவரா? இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை மையம் அறிக்கை
"திருமாவுக்கு பிரஷர்.. அவர் மனசு இங்கதான் இருக்கு" உடைத்து பேசிய தவெக தலைவர் விஜய்!
Aadhav Arjuna: விஜய்யை ஐஸ் மழையில் நனைய வைத்த ஆதவ் அர்ஜூனா! விசிகவுக்கு டாடா?; டென்சனில் திருமா?
Aadhav Arjuna: விஜய்யை ஐஸ் மழையில் நனைய வைத்த ஆதவ் அர்ஜூனா! விசிகவுக்கு டாடா?; டென்சனில் திருமா?
Aadhav Arjuna: ” 2026 தேர்தலில் மன்னராட்சி ஒழிக்கப்படனும் “ விஜய் முன் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு

"பார்ப்பனியத்தை தூக்கி அடி" அறிவு பாடிய அந்த வரி.. கைத்தட்டி வரவேற்ற தவெக தலைவர் விஜய்!
நுழைவுத் தேர்வை திணிக்கும் யுஜிசி? பள்ளிக்கல்விக்கு பாதிப்பு? எழும் எதிர்ப்புகள்!

மக்களே ரெடியா? படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்.. விரைவில் அசத்த வருகிறது!

Embed widget