மேலும் அறிய

Mettur Dam : மேட்டூர் அணையின் நீர்வரத்து 600 கன அடியில் இருந்து 807 கன அடியாக அதிகரிப்பு.

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 693 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 600 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 807 கன அடியாக அதிகரித்துள்ளது. 

Mettur Dam : மேட்டூர் அணையின் நீர்வரத்து 600 கன அடியில் இருந்து 807 கன அடியாக அதிகரிப்பு.

நீர்மட்டம்:

அணையின் நீர் மட்டம் 71.27 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 33.80 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 90 வது ஆண்டாக ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது குறுவை, சம்பா அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் மேட்டூர் அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. அணையில் தண்ணீர் மிகவும் குறைவாக உள்ளதால் 16 கண் மதகுகள் மூடப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்டிருந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 250 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Mettur Dam : மேட்டூர் அணையின் நீர்வரத்து 600 கன அடியில் இருந்து 807 கன அடியாக அதிகரிப்பு.

கர்நாடக அணைகள்:

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 96.82 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 20.41 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,139 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 875 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 54.56 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 13.50 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 180 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 300 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CSK vs RR LIVE Score: மீண்டும் டாஸ் தோற்ற ருதுராஜ்; பேட்டிங் செய்ய களமிறங்கும் ராஜஸ்தான்!
CSK vs RR LIVE Score: மீண்டும் டாஸ் தோற்ற ருதுராஜ்; பேட்டிங் செய்ய களமிறங்கும் ராஜஸ்தான்!
TN Headlines: சவுக்கு சங்கர் மீது பாய்ந்த குண்டாஸ்! பல மாவட்டங்களில் கனமழை - இதுவரை ஒரு ரவுண்ட் அப்!
TN Headlines: சவுக்கு சங்கர் மீது பாய்ந்த குண்டாஸ்! பல மாவட்டங்களில் கனமழை - இதுவரை ஒரு ரவுண்ட் அப்!
CWC 5: நான் யாருக்கும் மாற்று இல்லை, வெங்கடேஷ் பட்டை மீட் பண்ணதில்லை.. மாதம்பட்டி ரங்கராஜ் பளிச்!
CWC 5: நான் யாருக்கும் மாற்று இல்லை, வெங்கடேஷ் பட்டை மீட் பண்ணதில்லை.. மாதம்பட்டி ரங்கராஜ் பளிச்!
TN Weather Update: பலத்த காற்றுடன் கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்?
பலத்த காற்றுடன் கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Raghava Lawrence gifted tractors to farmers | விவசாயிகளுக்கு பிரியாணி விருந்து - லாரன்ஸ் சர்ப்ரைஸ்Premalatha Vijayakanth : ’’கேப்டன் உயிரோடு இருந்தால்..’’பத்ம விருதுடன் பிரேமலதா..உருக்கமான பேட்டிRahul Gandhi attacks BJP : BJP-க்கு புது விளக்கம்!  ராகுல் காந்தி நெத்தியடி! பரபரக்கும் ஆந்திராSelvaperunthagai on Annamalai : ”கச்சத்தீவு விவகாரம்.. வாய் திறங்க அ.மலை?” செல்வப்பெருந்தகை ஆவேசம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CSK vs RR LIVE Score: மீண்டும் டாஸ் தோற்ற ருதுராஜ்; பேட்டிங் செய்ய களமிறங்கும் ராஜஸ்தான்!
CSK vs RR LIVE Score: மீண்டும் டாஸ் தோற்ற ருதுராஜ்; பேட்டிங் செய்ய களமிறங்கும் ராஜஸ்தான்!
TN Headlines: சவுக்கு சங்கர் மீது பாய்ந்த குண்டாஸ்! பல மாவட்டங்களில் கனமழை - இதுவரை ஒரு ரவுண்ட் அப்!
TN Headlines: சவுக்கு சங்கர் மீது பாய்ந்த குண்டாஸ்! பல மாவட்டங்களில் கனமழை - இதுவரை ஒரு ரவுண்ட் அப்!
CWC 5: நான் யாருக்கும் மாற்று இல்லை, வெங்கடேஷ் பட்டை மீட் பண்ணதில்லை.. மாதம்பட்டி ரங்கராஜ் பளிச்!
CWC 5: நான் யாருக்கும் மாற்று இல்லை, வெங்கடேஷ் பட்டை மீட் பண்ணதில்லை.. மாதம்பட்டி ரங்கராஜ் பளிச்!
TN Weather Update: பலத்த காற்றுடன் கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்?
பலத்த காற்றுடன் கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்?
Virat Kohli: முக்கிய சாதனையை இன்று எட்டி பறிக்கப்போகும் விராட் கோலி.. முதல் வீரர் இவர்தானாம்..!
முக்கிய சாதனையை இன்று எட்டி பறிக்கப்போகும் விராட் கோலி.. முதல் வீரர் இவர்தானாம்..!
Breaking News LIVE: ராகுல் காந்தியின் வயதைவிட குறைவான சீட்டுக்களைத்தான் காங்கிரஸ் ஜெயிக்கும் - மோடி
ராகுல் காந்தியின் வயதைவிட குறைவான சீட்டுக்களைத்தான் காங்கிரஸ் ஜெயிக்கும் - மோடி
Anu Mohan: 2024-ஆம் ஆண்டில் உலகளவில் காத்திருக்கும் பேரழிவு..குண்டை தூக்கிப்போடும் அனுமோகன்
2024-ஆம் ஆண்டில் உலகளவில் காத்திருக்கும் பேரழிவு..குண்டை தூக்கிப்போடும் அனுமோகன்
Election Movie: பா.ரஞ்சித் மட்டும் இல்லைன்னா அவ்வளவுதான்.. பட விழாவில் நெகிழ்ந்து பேசிய இயக்குநர் தமிழ்!
பா.ரஞ்சித் மட்டும் இல்லைன்னா அவ்வளவுதான்.. பட விழாவில் நெகிழ்ந்து பேசிய இயக்குநர் தமிழ்!
Embed widget