(Source: ECI/ABP News/ABP Majha)
கரூர் பாலவிநாயகா புளூ மெட்டல்ஸ் கல்குவாரியில் வருமான வரித்துறையினர் சோதனை
காட்டுமுன்னூரில் உள்ள பாலவிநாயகா புளூ மெட்டல்ஸ் என்ற கல்குவாரியில் வருமான வரித்துறையினர் சோதனை துவக்கம்.
கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே காட்டுமுன்னூரில் உள்ள பாலவிநாயகா புளூ மெட்டல்ஸ் என்ற கல்குவாரியில் வருமான வரித்துறையினர் சோதனை துவக்கம். வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கியுள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் காலை பல்வேறு பகுதிகளில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள், மற்றும் அவரின் சகோதரர் அசோக் குமார் வீடு உள்ளிட்ட பகுதிகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள சென்ற போது திமுகவினர் தடுத்து நிறுத்தியதால் அதிகாரிகள் எஸ்பி அலுவலகத்திற்கு சென்று போலீசார் பாதுகாப்பு உறுதியுடன் சோதனை மேற்கொள்ள தயாராக இருந்த நிலையில் இப்போது கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே காட்டுமுன்னூரில் உள்ள பாலவிநாயகா புளூ மெட்டல்ஸ் என்ற கல்குவாரியில் வருமான வரித்துறையினர் சோதனையை தொடங்கியுள்ளனர்.
மேலும் அப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் கல்குவாரி முன்பு பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான தங்கராஜ் என்பவருக்கு சொந்தமானது இந்த கல்குவாரி என்பது குறிப்பிடத்தக்கது.
நான்கு வாகனங்களில் 15க்கு மேற்பட்ட வருமானவரித்துறையினர் உள்ளே சென்று தற்போது சோதனை மேற்கொண்டு வருகின்றனர். காலை முதல் சோதனை செய்ய முற்பட்டபோது வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டு சோதனை மேற்கொள்ளாமல் இருந்த நிலையில், தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர் தங்கராஜ் என்பவருக்கு சொந்தமான பால விநாயகா புளூ மெட்டலஸில் 15-க்கு மேற்பட்டவர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், கரூர் மாநகரில் ஒரு சில பகுதிகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கியுள்ளனர். கரூர் பெரியார் நகர் நிர்மலா கார்டன் பிரேம்குமார் இல்லத்தின் தொடர்ந்து இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 4 மத்திய பாதுகாப்பு படையினர் (உள்ளிட்ட 20 மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கரூரில் பல்வேறு இடங்களில் நேற்று சோதனை நடத்த வந்த வருமான வரித்துறை அதிகாரிகளை தடுத்த நபர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல், அனுமதி இன்றி 5-க்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்று கூடுதல், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அடையாளம் தெரியாத நபர்கள் என்ற அடிப்படையில் கரூர் மாவட்ட காவல்துறை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.