5 நாட்கள் நடந்த அதிரடி சோதனை.. வரும் சனிக்கிழமை ஆஜராக ஜெகத்ரட்சகனுக்கு வருமான வரித்துறை சம்மன்..!
5 நாட்கள் நடந்த அதிரடி சோதனை.. வரும் சனிக்கிழமை ஆஜராக ஜெகத்ரட்சகனுக்கு வருமான வரித்துறை சம்மன்.
திமுக எம்பி ஜெகத்ரட்சகன் வரும் சனிக்கிழமையன்று அலுவலகத்தில் ஆஜராக வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் 5 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
வரி ஏய்ப்பு புகாரை தொடர்ந்து தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் கடந்த 6-ம் தேதியில் இருந்து சோதனை நடத்தி வருகின்றனர். அதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் அடிப்படையில் அவரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
முன்னாள் மத்திய இணை அமைச்சரும் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் அவரது கல்வி நிலையங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் மூலம் ஈட்டிய வருவாய் முறையாக கணக்கு காட்டாமல் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக வருமான வரித்துறைக்கு புகார் சென்றது. இதையெடுத்து, வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கடந்த 5-ம் தேதி முதல் சென்னை, காஞ்சிபுரம், புதுச்சேரி, திருவள்ளூர், திருப்பூர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். ஐந்து நாட்கள் சோதனை நடத்தப்பட்டது.
அண்ணாநகரில் ஜெகத்ரட்சகனின் உறவினரான பாலசுப்பிரமணியம் மற்றும் குப்புசாமி ஆகியோர் இணைந்துநடத்தி வரும் கட்டுமான நிறுவனத்திலும், பாலசுப்பிரமணியம் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நிறைவடைந்தது. இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் நடத்தப்பட்ட சோதனையில் சில பைகளில் லேப்டாப் உட்பட சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. ஏற்கனவே 2020-’ல் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி சட்டவிரோத பணப்பறிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் ரூ.89.19 கோடி மதிப்பிலான அவரது சொத்துக்களை முடக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஐந்து நாட்களாக நடைபெற்ற சோதனையில் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடத்தில் நான்கரை கோடி ரூபாய் பணம் மற்றும் 16 கிலோ தங்க நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சவிதா கல்வி குழுமம் தொடர்புடைய கல்வி நிறுவனங்களில் 250 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகின.அங்கு 27 கோடி பணம் 18 கிலோ தங்க கட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகின. இந்த நிலையில் சவீதா குழுமத்தின் நிர்வாகிகளுக்கும் சம்மன் அனுப்பி நேரில் விசாரணைக்கு அழைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளது.
மேலும் வாசிக்க..
கரூரில் அரசு பள்ளியில் சிறுதானிய உணவு கண்காட்சி; ஆர்வத்துடன் பார்வையிட்ட மாணவர்கள்