TN Rain Alert: தமிழ்நாடு முழுவதும் கொட்டித் தீர்த்த மழை...! எங்கெல்லாம் அதிக மழை..? முழு விவரம்...!
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மூலனூர் (திருப்பூர் மாவட்டம்), தல்லாகுளம் (மதுரை மாவட்டம்) 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
தென்கிழக்கு மத்திய வங்கக் கடலில் அதி தீவிர புயலாக வலுப்பெற்ற மோக்கா புயல் போர்ட் பிளேயருக்கு மேற்கு-வடமேற்கில் சுமார் 520 கிமீ தொலைவிலும், காக்ஸ் பஜாருக்கு 1010 கிமீ தென்-தென்மேற்கே (வங்காளதேசம்) தொலைவில், சிட்வேவிற்கு (மியான்மர்) 930 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இது வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்து கிழக்கு மத்திய வங்கக் கடலில் மேலும் வலுப்பெற வாய்ப்பு உள்ளது.
மோக்கா புயல்:
இது தென்கிழக்கு வங்காளதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரைகளை காக்ஸ் பஜார் (வங்காளதேசம்) மற்றும் கியாக்பியு (மியான்மர்) இடையே மே 14 ஆம் தேதி நண்பகல் சிட்வே (மியான்மர்) க்கு அருகில் அதி தீவிர சூறாவளி புயலாகக் கடக்கக்கூடும், புயல் கரையை கடக்கும் போது அதிகபட்சமாக 150- 160 கிமீ வேகத்தில் அவ்வப்போது 175 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நேற்று நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மூலனூர் (திருப்பூர் மாவட்டம்), தல்லாகுளம் (மதுரை மாவட்டம்) 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மழை நிலவரம்:
மேலும் சூரலக்கோடு (கன்னியாகுமரி மாவட்டம்), நிலக்கோட்டை (திண்டுக்கல் மாவட்டம்), முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி மாவட்டம்), மதுரை தெற்கு தலா 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதனை தொடர்ந்து பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி மாவட்டம்), நாமக்கல் (நாமக்கல் மாவட்டம்), திருப்புவனம் (சிவகங்கை மாவட்டம்), புத்தன் அணை (கன்னியாகுமரி மாவட்டம்), மேட்டுப்பட்டி (மதுரை மாவட்டம்), மதுரை வடக்கு (மதுரை மாவட்டம்), காங்கேயம் (திருப்பூர் மாவட்டம்), சிவலோகம் (கன்னியாகுமரி மாவட்டம்) , கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம்) தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
பெரியபட்டி (மதுரை மாவட்டம்), பாலமோர் (கன்னியாகுமரி மாவட்டம்), சத்தியார் (மதுரை மாவட்டம்), காமாட்சிபுரம் (திண்டுக்கல் மாவட்டம்), ஓடன்சத்திரம் (திண்டுக்கல் மாவட்டம்), கல்லக்குடி (திருச்சி மாவட்டம்), தாராபுரம் (திருப்பூர் மாவட்டம்), உப்பர் அணை (திருப்பூர் மாவட்டம்), தேவாலா (நீலகிரி மாவட்டம்), ஆண்டிப்பட்டி (மதுரை மாவட்டம்), பெரியகுளம் (தேனி மாவட்டம்), கல்லட்டி (நீலகிரி மாவட்டம்), டிஎன்ஏயூ கோவை (கோவை மாவட்டம்), காரையூர் (புதுக்கோட்டை மாவட்டம்) தலா 3, குண்டடம் (திருப்பூர் மாவட்டம்), பொன்னமராவதி (புதுக்கோட்டை மாவட்டம்), கல்லந்திரி (மதுரை மாவட்டம்), கடவூர் (கரூர் மாவட்டம்), அழகரை எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்), வாடிப்பட்டி (மதுரை மாவட்டம்), பூதபாண்டி (கன்னியாகுமரி மாவட்டம்), பாலவீதி (கரூர் மாவட்டம்), அரவக்குறிச்சி (கரூர் மாவட்டம்), கொடநாடு (நீலகிரி மாவட்டம்), வட்டமலை நீர்த்தேக்கம் (திருப்பூர் மாவட்டம்) தலா 2 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.