மேலும் அறிய

Perarivalan Judgement: பேரறிவாளன் விடுதலை: உச்சநீதிமன்ற தீர்ப்பின் சிறப்பம்சங்கள்...!

பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? என்பதை கீழே விரிவாக காணலாம்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி  காந்தி கொலை வழக்கில் கடந்த 1991ம் ஆண்டு பேரறிவாளன் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கில் இருந்து தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று கடந்த 2016ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் மனுதாக்கல் செய்தார். தொடர்ந்து 9 மாதங்களாக பரோலில் இருந்த பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் ஜாமீன் வழங்கியது. அதனையடுத்து, பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யக்கோரி தொடர்ந்த வழக்கு ஏப்ரல் 27ம் தேதி விசாரணைக்கு வந்தது. 

இந்த வழக்கினை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல். நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை செய்தது. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 

இந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

  • அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 161-ன்படி மாநில அமைச்சரவை அளிக்கும் பரிந்துரையை ஆளுநர் நிச்சயம் ஏற்க வேண்டும். 
  • மேலும் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 161-ன் கீழ் முடிவு எடுக்க நீண்ட காலம் எடுத்தால் அதை நிச்சயம் நீதிமன்றம் ஆய்வு செய்ய முடியும். அதிலும் குறிப்பாக அதற்கு மாநில அமைச்சரவை பரிந்துரை அளித்தும் முடிவு எடுக்காமல் இருந்தால் ஆய்வு செய்யலாம். 
  • தமிழ்நாடு அமைச்சரவையின் பரிந்துரையை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டது அல்ல. ஆகவே இந்த பேரறிவாளன் வழக்கில் ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை அளித்தது ஏற்புடையதல்ல.
  • அதேபோல் ஐபிசி 302 பிரிவின் கீழ் பதியப்பட்ட வழக்கிற்கு மாநில அரசு பரிந்துரை செய்யலாம். அதாவது அந்த வழக்கிற்கு அரசியலமைப்பு சட்டமோ அல்லது நாடாளுமன்ற சட்டமோ எந்த அரசு பரிந்துரை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கவில்லை என்றால் மாநில அரசு அதற்கு பரிந்துரை செய்யலாம். 

இவ்வாறு இந்த வழக்கின் தீர்ப்பில் சில முக்கியமான அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.  மேலும் இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தன்னுடைய 142 பிரிவின் கீழ் உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

காவிரிக்காக உச்சநீதிமன்றம் செல்லும் தமிழக அரசு: ‘தாமதமானாலும் சரியான நடவடிக்கை’ - பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்
காவிரிக்காக உச்சநீதிமன்றம் செல்லும் தமிழக அரசு: ‘தாமதமானாலும் சரியான நடவடிக்கை’ - பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
Annamalai letter to Vijay : 500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! CM விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! சிஎம் விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
ராமேஸ்வரம் - ஹூப்ளி ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி! ஆகஸ்ட் முழுவதும் சேவை நீட்டிப்பு!
ராமேஸ்வரம் - ஹூப்ளி ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி! ஆகஸ்ட் முழுவதும் சேவை நீட்டிப்பு!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
Trump on Iran: ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
Annamalai letter to Vijay : 500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! CM விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! சிஎம் விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
ஒரே சார்ஜில் 187 கி.மீட்டர் மைலேஜ்... வாங்கலாமா VIDA VX2 Plus இ ஸ்கூட்டர்! என்ன வசதி இருக்குது?
ஒரே சார்ஜில் 187 கி.மீட்டர் மைலேஜ்... வாங்கலாமா VIDA VX2 Plus இ ஸ்கூட்டர்! என்ன வசதி இருக்குது?
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Embed widget