குடும்ப அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு: இம்மாதம் இறுதியில் நியாய விலைக் கடைகளில் அனைத்து பொருட்களும் கிடைக்கும்..
நியாய விலைக் கடைகளிலும் வரும் 31.08.2024 அன்று அனைத்து அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் பெற்றுக் கொள்ளலாம் -
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து குடி மக்களுக்கும் குறிப்பாக, ஏழை எளிய மக்களுக்கு உணவுப் பாதுகாப்பு அளிக்கும் பொருட்டு, மாதந்தோறும் இன்றியமையாப் பொருட்களை நல்ல தரத்தோடும், நியாயமான விலையிலும் அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகாமையிலேயே நியாய விலைக் கடைகள் வாயிலாக விநியோகம் செய்வதே பொது விநியோகத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
புதுவிநியோக திட்டத்தின் நோக்கங்கள்:
தமிழ்நாட்டிலிருந்து , பசி,பட்டினியை அறவே ஒழித்தல், இன்றியமையாப் பொருட்களின் விலை ஏற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து குடி மக்களை காத்தல்,பொது விநியோகத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களை செறிவூட்டி வழங்குவதன் மூலம் சத்து குறைபாட்டை குறைத்தல்.
வீட்டு உபயோக எரிபொருள்களான மண்ணெண்ணெய் மற்றும் எரிவாயு உருளை ஆகியவற்றை மக்களுக்கு நியாயமான விலையில் வழங்குதல், குடும்ப அட்டைதாரர்கள் எளிதில் அணுகும் வகையில் நியாய விலைக்கடைகள் அமைத்தலை உறுதிசெய்தல். ஏழை, எளிய மக்கள் வாங்கும் வகையில் அத்தியாவசியப் பொருட்களை நியாயமான விலையில் வழங்குதல், மாதந்தோறும் சரியான நேரத்தில் இன்றியமையாப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்தல் ஆகும்.
குறிப்பாக தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஏழை, எளிய மக்கள் முழுமையாக பயன் அடைய வேண்டும். தரமான உணவை உட்கொள்ள வேண்டும் என்பதற்காக நியாய விலை கடைகள் அனைத்து இடங்களிலும் திறக்கப்பட்டது. இதன் மூலம் மிக குறைவான விலைகளில் சத்தான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் நியாய விலை கடைகளில் அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய், சர்க்கரை, உள்ளிட்ட அனைத்து பொருட்களும் முறையாக பொதுமக்களுக்கு சென்று அடைகிறதா என்று கண்காணிக்க குழு அமைக்கப்பட்டு தமிழக அரசால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
நியாய விலை கடைகள் அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட கால நேரங்களில் முறையாக திறக்க வேண்டும். இல்லை என்று புகார்கள் வரும் பட்சத்தில் உரிய நியாய விலை கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகையால் எந்த பொருள்களும் தடையின்றி பொதுமக்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் விநியோகம் செய்திருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நியாய விலை கடைகளால் தமிழ்நாட்டில் பல லட்சம் மக்கள் பயனடைந்து வருகிறார்கள். மேலும் பொது மக்களின் கோரிக்கையை ஏற்ப சில இடங்களில் புதிதாக நியாய விலை கடைகள் இருப்பதற்காக நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த மாதம் இறுதியில் நியாய விலைகள் இயங்கும்.
இந்நிலையில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியது..
உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் மாதத்தின் கடைசி பணி நாளில் இன்றியமையாப் பண்டங்கள் விநியோகம் மேற்கொள்ளப்படுவதில்லை.
ஆனால் இம்மாதம் அனைத்து அட்டைதாரர்களுக்கும் இன்றியமையாப் பண்டங்கள் தடையின்றி கிடைக்கப்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் வருகின்ற 31.08.2024 அன்று அனைத்து நியாய விலைக் கடைகளில் இன்றியமையாப் பண்டங்கள் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது.
இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி ஆகஸ்ட் 2024 மாதத்திற்கான பொருட்கள் பெறாத அட்டைதாரர்கள் பெற்று பயனடையலாம் என உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.