Weather: மக்களே எச்சரிக்கை! 16 மாவட்டங்களில் சதமடிக்கும் வெயில்
TN Weather: தமிழ்நாட்டில் நாளை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் 100டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டும் என்பதால், அதிக வெப்பநிலை நிலவ வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அடுத்த ஏழு தினங்களுக்கு வானிலை:
தென்தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இந்நிலையில் 22-04-2025 மற்றும் 23-04-2025 ஆகிய நாட்களில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், 24-04-2025 முதல் 28-04-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Also Read: John Cena: ஜான் சீனா புதிய சாதனை: WWE ரெஸ்ட்லிமேனியாவில் அசத்தல் வெற்றி
16 மாவட்டங்களில் 100ஐ தாண்டும் வெயில்:
தமிழ்நாட்டின் நாளை திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு, திருச்சி, கரூர், தஞ்சாவூர், சிவகங்கை, மதுரை, விருதுநகர், மயிலாடுதுறை ஆகிய 16 மாவட்டங்களில் அதிகபட்சமாக 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்ட வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
22-04-2025 முதல் 26-04-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. எனினும், ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2.3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
22-04-2025 முதல் 26-04-2025 வரை: அதிக வெப்பநிலையம், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) April 22, 2025
தினசரி வானிலை அறிக்கை pic.twitter.com/fcMh8w0IYy
சென்னை வானிலை முன்னறிவிப்பு:
இன்று (22-04-2025), வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஓட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்
நாளை (23-04-2025), வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

