Student Scholarship: நிபந்தனை இல்லை; மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் உதவித்தொகை- விண்ணப்பிப்பது எப்படி?
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகையை மாநில அரசு வழங்குகிறது.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர்களுக்கு இலவசக் கல்வித் திட்டத்தின் கீழ் எந்த வித நிபந்தனையும் இல்லாமல் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகையை மாநில அரசு வழங்குகிறது.
உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு உதவித் தொகைகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மாணவிகளுக்கு இலவசக் கல்வித் திட்டம் என்ற பெயரில் தமிழக அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக அரசு, அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ், கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறது. இலவசக் கல்வித் திட்டத்தின்கீழ் இந்தத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல முதுகலை, பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் உள்ளிட்ட தொழில் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களும் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
இதன்மூலம் கல்விக் கட்டணம் முழுமையாக அரசால் வழங்கப்படும். அதேபோல புத்தகக் கட்டணம், தேர்வுக் கட்டணம், சிறப்புக் கட்டணம் ஆகியவையும் வழங்கப்படும்.
கூடுதல் விவரங்களுக்கு: https://www.bcmbcmw.tn.gov.in/
படிப்புக் கட்டணத்தோடு, மாதம் ரூ.400 என்ற அளவில் ஆண்டுக்கு ரூ.4,000 தங்குமிடச் செலவாக வழங்கப்படும். இந்தக் கட்டணங்கள் அனைத்தும் ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் என்ற அளவில் வழங்கப்படும்.
இந்தப் படிப்புகளைப் படிக்கும் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2,50,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபின மாணவர்கள் http://www.bcmbcscholarship.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அதில், https://www.bcmbcmw.tn.gov.in/forms/IIT_scholarship_Application_Fresh.pdf என்ற படிவத்தைப் பூர்த்தி செய்து,
பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம்,
எழிலகம் இணைப்பு கட்டிடம்,
2 ஆவது தளம், சேப்பாக்கம்,
சென்னை – 600 005 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்கள் வரும் டிசம்பர் 6ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு: https://www.bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarship_schemes என்ற இணைய முகவரியைக் காண வேண்டும்.
தொலைபேசி எண்: 044-28551462
இ-மெயில்: tngovtiitscholarship@gmail.com
அதேபோல, பிற மாவட்டங்களில் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம்.
இதையும் வாசிக்கலாம்: Free Underwear: அரசுப்பள்ளி மாணவிகளுக்கு இலவச உள்ளாடைகள்: திரும்பி பார்க்க வைக்கும் தன்னார்வ அமைப்பு!