மேலும் அறிய

ஓடும் ரயிலில் தாக்குதல் நடத்தினால் 3 ஆண்டுகள் சிறை... ரயில்வே ஏடிஜிபி கடும் எச்சரிக்கை..

ஓடும் ரயிலில் தாக்குதல் நடத்தினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என ரயில்வே ஏடிஜிபி வனிதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளத்தில் வைரலாக வீடியோ ஒன்று பரவியது. அதில் ஓடும் ரயில் ஒன்றில் வடமாநிலத்தைச் சேர்ந்த இருவரை ஒரு நபர் பயங்கரமாக தாக்கும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. தாக்குவது மட்டுமின்றி அந்த இளைஞர்களிடம் நீங்கள் எதற்கு இங்கே வருகிறீர்கள். நாங்கள் தான் இருக்கிறோமே, நாங்க எல்லா வேலையும் செய்து கொள்வோம் என கூறி  மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டுவதும் அந்த வீடியோவில் பதிவாகியிருந்தது.

வீடியோவை அடிப்படையாக கொண்டு சென்னை சென்ட்ரல் ரயில்வே காவல்துறையினர் ஆபாசமாக பேசுதல், காயம் ஏற்படுத்துதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் விவரம் எதுவும் தெரியாமல் இருந்ததால் இளைஞர்களை தாக்கிய நபரை தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவித்தது. மேலும் சம்பந்தப்பட்ட நபர் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு தக்க சன்மானம் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டம் கானை கிராமத்தைச் சேர்ந்த மகிமைதாஸ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் விருதாச்சலம் செல்லும் போது மகிமை தாஸ் அந்த இளைஞர்களை தாக்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மீது சில வழக்குகள் உள்ள நிலையில், சென்னை அழைத்து வந்து விசாரிக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். 

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே ஏடிஜிபி வனிதா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "பொதுமக்கள் ரயிலில் ஏதாவது தப்பு நடப்பதை ட்விட்டரோ, பேஸ்புக்கிலோ,வாட்ஸ்அப்பிலோ தகவல் அனுப்புங்கள். ரயில்வே துறையில் 1512 என்ற எண்ணிற்கு பாதுகாப்பு பிரச்சினைக்கு தகவல் தெரிவிக்கலாம்.  

அப்படித்தான் சமூக அக்கறையுடன் பதிவிடப்பட்ட இந்த வீடியோவை கொண்டு நாங்கள் இந்த வழக்கை கையில் எடுத்தோம். இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை பொதுமக்களின் துணையுடன்  தான் பிடித்துள்ளோம்" என தெரிவித்தார். மேலும் ஓடும் ரயிலில் தாக்குதல் நடத்தினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!

”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!

”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 

”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kongu Eswaran on Aadhav Arjuna : ’’ஜாக்கிரதை திருமா!ஆதவ்-ஆல் விசிக உடையும்’’எச்சரிக்கும்  ஈஸ்வரன்Ravichandran Ashwin on CSK : ’’வாழ்க்கை ஒரு வட்டம் மீண்டும் மஞ்சள் ஜெர்சி!’’உணர்ச்சிவசப்பட்ட அஸ்வின்IPL Auction 2025 | மீண்டும் இந்திரன் சந்திரன் Combo!CSK வில் RRR கேங்!தோனியின் மாஸ் ப்ளான் | AshwinIPL Auction 2025 | ராகுலின் STATS தெரியுமா?கோட்டைவிட்ட RCB - CSK..தட்டி தூக்கிய டெல்லி | KL Rahul

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
TNPSC: தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை- ’’இதையெல்லாம் செய்தால் விடைத்தாள் செல்லாதது ஆக்கப்படும்’’

TRUST Exam: பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை: ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

TVK Vijay: பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறி: அரசுக்கு ஐடியா கொடுக்கும் தவெக தலைவர் விஜய் 

”நாடாளுமன்றத்திற்கு உள்ளே செல்லும் முன் மோடி செய்த சம்பவம்” அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்..!

Embed widget