''முதல்வரை தமிழக முதல்வர்னு., நான்தான் முதல்ல சொன்னேன். பெருமையா இருக்கு" - தொகுப்பாளர் டோஷிலா உமாசங்கர்..

"அம்மா அரங்கத்தில் சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் பண்ணியிருக்கேன். சினிமா சார்ந்த இசை வெளியீட்டு நிகழ்ச்சிகளும் பண்ணியிருக்கேன். இருந்தும், தமிழக முதலமைச்சர் பதவியேற்பு தொடர்பான நிகழ்ச்சியை தொகுத்து வழங்குறது  இதுதான் முதல்முறை” என்றார் டோஷிலா

''தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றுள்ளார். இவரது பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் நடந்து முடிந்திருக்கிறது. பல தரப்பட்ட அரசியல் தலைவர்களும்,  சினிமா நட்சத்திரங்களும் முதல்வர் ஸ்டாலினுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளர் டோஷிலா உமாசங்கர் தொகுத்து வழங்கியிருக்கிறார். இந்த நிகழ்ச்சி குறித்து தோஷிலா உமாசங்கரிடம் பேசினேன். 

'முதல்வரை தமிழக முதல்வர்னு., நான்தான் முதல்ல சொன்னேன். பெருமையா இருக்கு
''வாழ்க்கையில மிகவும் மகிழ்ச்சியான தருணம். இன்னைக்கு நடந்த நிகழ்ச்சியில 'நாட்டுப்பண்' னு மட்டும் சொல்லணும்ங்குறதுதான் எனக்கான அறிவுறுத்தல். ஆனா, மாண்புமிகு தமிழக முதல்வர்னு சொல்லணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன். ஏன்னா, அது வரைக்கும் யாரும் இப்படி சொல்லல. முதல்ல நம்ம சொல்லணும்னு நினைச்சு சொன்னேன். அவையில முதல்வருக்கு, அமைச்சர் பெருமக்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள் சொல்லிட்டு பேசுனேன். ரொம்ப சந்தோஷமா இருக்கேன். ''

''இதுக்கு முன்னாடி அரசாங்கம் தொடர்பான நிகழ்ச்சிகள் நிறைய பண்ணியிருக்கேன். சென்னை கார்ப்பரேஷன் தொடர்பான நிகழ்ச்சிகள் நிறைய பண்ணியிருக்கேன். அம்மா அரங்கத்தில் சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் பண்ணியிருக்கேன். சினிமா சார்ந்த இசை வெளியீட்டு நிகழ்ச்சிகளும் பண்ணியிருக்கேன். இருந்தும், தமிழக முதலமைச்சர் பதவியேற்பு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியை தொகுத்து வழங்குறது இதுதான் முதல் முறை. பதினைஞ்சு வருஷமா இந்த துறையில இருக்கேன். இப்போ, கலைஞர் தொலைக்காட்சியிலும் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கிட்டு இருக்கேன். இருந்தும், பதிவுயேற்பு விழாவை டைரக்‌ஷன் பண்ற டீமுக்கு, நான் கலைஞர் தொலைக்காட்சியில் வேலை செய்றது தெரியாது. நல்ல இயல்பா தமிழ் பேசக்கூடிய தொகுப்பாளினி வேணும்னு தேடுறப்போ என்னுடைய பெயர் பரிந்துரைக்கப்பட்டு இருக்கு. என்னோட வீடியோ பாத்துட்டு என்னை தொடர்பு கொண்டு பேசுனாங்க. அப்போதான் கலைஞர் தொலைக்காட்சியில் நான் வேலை பார்க்கிறேன்னு தெரிஞ்சிக்கிட்டாங்க. 

எப்போவும் ஒரு நிகழ்ச்சியில தொகுத்து வழங்குறப்போ நம்ம சொல்ற விஷயத்தை முதல்ல நம்மலே பாலோ பண்ணனும்னு நினைப்பேன். இந்த வகையில இன்னைக்கு நடந்த நிகழ்ச்சியில சமூக இடைவெளியை பின்பற்றுங்க, கிருமி நாசினியை பயன்படுத்துங்கனு அறிவுறித்திட்டே இருக்குறப்போ நம்ம இதை மீற கூடாதுனு தமிழக முதல்வர் உட்பட யார்கிட்டயும் செல்ஃபி எடுக்கல. இதனால, நல்ல தொகுப்பாளரா மட்டும் இருந்து என்னோட வேலையை செஞ்சு முடிச்சேன். பெருமையா இருக்கு” என்கிறார்

'முதல்வரை தமிழக முதல்வர்னு., நான்தான் முதல்ல சொன்னேன். பெருமையா இருக்கு
''தமிழக முதலமைச்சர் பதிவியேற்பு விழாவுல தொகுப்பாளரா இருக்க போறேன்னு வீட்டுல யார்கிட்டயும் சொல்ல. எங்க அம்மா டி.வி.ல நிகழ்ச்சியை பார்த்துட்டு, 'எங்க, உன்னை காட்டவே இல்லனு' கேட்டாங்க. 'அம்மா, இது சி.எம் நிகழ்ச்சிம்மா அவரை தான் காட்டுவாங்க அம்மானு' சொன்னேன். அம்மாவுக்கு நம்ம பிள்ளையை பார்க்க முடியலனு சின்ன வருத்தம். மத்தபடி நான் தொகுத்து வழங்குனதுல அம்மா மற்றும் என்னோட அன்புக்குரியவங்க எல்லாருமே செம ஹேப்பி. '' என்று சொல்லி முடித்தார் டோஷிலா. 

Tags: cm Stalin chief minister Tamil Nadu Toshila Umasankar udhayanidhi stallin

தொடர்புடைய செய்திகள்

#ArrestMadanop: யூ ட்யூபர் மதனுக்கு எதிராக தொடர்ந்து வலுக்கும் வலைதள பதிவுகள்..!

#ArrestMadanop: யூ ட்யூபர் மதனுக்கு எதிராக தொடர்ந்து வலுக்கும் வலைதள பதிவுகள்..!

TN Collectors appointment : 24 மாவட்டங்களுக்குப் புதிய ஆட்சியாளர்கள் நியமனம்!

TN Collectors appointment : 24 மாவட்டங்களுக்குப் புதிய ஆட்சியாளர்கள் நியமனம்!

செங்கல்பட்டு : ஒரு மாதத்தில் 1,058 நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பு..!

செங்கல்பட்டு : ஒரு மாதத்தில் 1,058 நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பு..!

காஞ்சிபுரம் : குறைகிறது கொரோனா தொற்று எண்ணிக்கை! 13 பேர் உயிரிழப்பு..!

காஞ்சிபுரம் : குறைகிறது கொரோனா தொற்று எண்ணிக்கை! 13 பேர் உயிரிழப்பு..!

Shankar Jiwal on Madhan : யூ ட்யூபர் மதன் மீது நிச்சயம் நடவடிக்கை - சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்!

Shankar Jiwal on Madhan : யூ ட்யூபர் மதன் மீது நிச்சயம் நடவடிக்கை - சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்!

டாப் நியூஸ்

IAS Officers Transfer : 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

IAS Officers Transfer : 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

ArrestMadanOP in Social Media : ட்ரெண்டாகும் #ArrestMadhanOP - மதனை கைது செய்யுங்கள்!

ArrestMadanOP in Social Media : ட்ரெண்டாகும் #ArrestMadhanOP - மதனை கைது செய்யுங்கள்!

PUBG Madan Accused : சிறுமிகளிடம் ஆபாச வார்த்தைகள், அத்துமீறல் : குற்றவரிசையில் கொடூர ஆன்லைன் கேமர் மதன்..!

PUBG Madan Accused : சிறுமிகளிடம் ஆபாச வார்த்தைகள், அத்துமீறல் : குற்றவரிசையில் கொடூர ஆன்லைன் கேமர் மதன்..!

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 14 ஆயிரமாக குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 14 ஆயிரமாக குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு