Hosur: பஞ்சர் கடையில் ஏற்பட்ட திடீர் விபத்து - 4 பேர் கவலைக்கிடம் - ஓசூரில் சோகம்
ஒசூர் அருகே பஞ்சர் கடையில் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒசூர் அருகே பஞ்சர் கடை ஒன்றில் ஏர் கம்பிரஷர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பலத்த காயங்களுடன் ஒசூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பாகலூர், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் லதிப்(38) என்ற மாற்றுத்திறனாளி சொந்தமாக பஞ்சர் கடையை நடத்தி வருகிறார். நாமக்ககல் மாவட்டத்தை சேர்ந்த முருகன் வேலை செய்து வருகிறார். கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த லாரி டிரைவர்கள் லிங்கப்பா, முத்து ஆகிய இருவரும் இந்தக் கடையில் டயர்களுக்கு பஞ்சர் போட வேண்டும் என்று கோரியுள்ளனர். அப்போது ஏர் கம்பிரஷர் பலத்த சத்தத்துடன் வெடித்ததில் அங்கு வேலை செய்தவர்கள் தூக்கி வீசப்பட்டு கடையின் மேற்கூரை பறந்தது.
இதில் உரிமையாளர் லதீப், முருகன், முத்து, லிங்கப்பா ஆகிய 4 பேர் கை, கால்கள் முறிந்து இரத்த வெள்ளத்துடன் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஒசூர் அரசு மருத்துவமனையில் அழைத்துச் செல்லப்பட்டனர். இது தொடர்பாக பாகலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Before You Go
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
ட்ரெண்டிங் செய்திகள்





















