கொரோனா தொற்று உறுதியா? இதில் கவனம் செலுத்துங்கள் - மருத்துவர் பிரியா சம்பத்குமார் அட்வைஸ்..
நாடு முழுவதும் அதிக அளவிலான கொரோனா நோயாளிகளை கையாள்வதில், பல்வேறு வகைகளில் மருத்துவர் பிரியாவின் அறிவுரைகள் உதவும்.
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 11,681 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, கோவிட்-19-க்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 84,361-ஆக அதிகரித்துள்ளது. இதில், அதிகபட்சமாக சென்னையில் 29,256 பேர் கொரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா தொற்று தொடர்பாக மக்களிடத்தில் அச்சவுணர்வும் அதிகரித்து காணப்படுகிறது. உடலில் கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் என்ன செய்வது? யாரை அணுகுவது? வீட்டில் நோய்வாய்ப்பட்ட நபர்களுக்கு அளிக்கப்படவேண்டிய முதற்கட்ட மருத்துவ கவனிப்பு என்ன? போன்ற பல்வேறு கேள்விகள் நம்மில் எழுகின்றன. கொரோனா போன்ற பெருந்தொற்று காலங்களில் விழிப்புணர்வு, அச்சஉணர்வு சிறந்ததாகவே அமையும்.
இந்நிலையில், பிரபல தொற்று நோயியல் மருத்துவ நிபுணர் பிரியா சம்பத்குமார் தனது ட்விட்டரில் கொரோனா நோய்த் தொற்றின் பல்வேறு கட்டங்களின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். நாடு முழுவதும் அதிக அளவிலான கொரோனா நோயாளிகளை கையாள்வதில், பல்வேறு வகைகளில் இவரின் அறிவுரைகள் உதவும்.
கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுவிட்டது? அடுத்து என்ன செய்யலாம்?
- ஆக்ஸிஜன் அளவு கண்காணிக்கப்பட வேண்டும்.
- ஆக்ஸிஜன் அளவு 90%-க்கும் அதிகமாக இருந்தால்,
1. காய்ச்சலுக்குத் தேவையான பாராசிட்டமால்
2. budesonide போன்ற Inhaled steroids
3. லேசான மற்றும் அறிகுறியற்ற நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கவேண்டிய அவசியமில்லை.
4. ஆக்ஸிஜன் அளவு தொடர்ச்சியாக கண்காணிக்கப்படவேண்டும்.
5. சிடி ஸ்கேன் செய்யவேண்டிய அவசியமில்லை.
2/ Diagnosed COVID? What next ?
— Priya Sampathkumar (@PSampathkumarMD) April 21, 2021
Check oxygen sats.
If sats > 90%, reassure
-Paracetamol as needed for fever
-Inhaled steroids (budesonide)
-Continue to follow sats
-No need for hospitalization
-No need for chest CT
3/ if O2 Sats < 90%
— Priya Sampathkumar (@PSampathkumarMD) April 21, 2021
-Supplemental oxygen
-Dexamethasone 6 mg/day or equivalent steroid (prednisone 40 mg, methylprednisolone 30 mg; hydrocortisone 150 mg
Steroid preparation/route does not make a difference
-Prone positioning ( sleeping on stomach)
5/ Following are not useful. Do not use routinely
— Priya Sampathkumar (@PSampathkumarMD) April 21, 2021
⁃Azithromycin
⁃Doxycycline
⁃Ivermectin
⁃Hydroxychloroquine
⁃Favipravir
ஆக்ஸிஜன் அளவு 90%க்கும் குறைவாக இருந்தால்,
துணை ஆக்சிஜன் சிகிச்சை முறை தேவைப்படும்.
-டெக்ஸாமெதாசோன் 6 mg/day (அ) அதற்கு சமமான ஸ்டீராய்டு மருந்துகள் (prednisone 40 mg, methylprednisolone 30 mg; hydrocortisone 150 mg)
Prone positioning (குப்புறப்படுத்து வயிற்றால் படுத்து தூங்குவது)
வீட்டில் ஆக்ஸிஜன் மற்றும் வாய்வழி மருந்துகள் எடுத்துக்கொள்ள முடியாத சூழலில், மருத்துவமனையில் அனுமதி பெறவும்.
⁃Azithromycin
⁃Doxycycline
⁃Ivermectin
⁃Hydroxychloroquine
⁃Favipravir
போன்ற மருந்துகள் அதிகம் பயன்தரக்கூடியதாக இருக்காது. எனவே, அவற்றை தொடர்ச்சியாக பயன்படுத்த வேண்டும். அவசரகாலப் பயன்பாடாக மிதமான கொரோனா நோய் அறிகுறி உள்ள நோயாளிகளிடம் ரெம்டெசிவிர் மருந்தை பயன்படுத்தலாம். இந்த மருந்து, கொரோனா உயிரிழப்புகளைத் தடுக்காது.
”தடுப்பூசியை ஊக்குவித்தல், சமூக விலகல், முகக்கவசம் அணிதல் மிக முக்கியமானது. கொரோனா மேலாண்மை நெறிமுறைகளை பின்பற்றவேண்டும்" என்று பதிவிட்டார்.
முன்னதாக, மத்திய ஆயுஷ் அமைச்சகம் நோய் தடுப்பு மருந்தாக நிலவேம்புக் குடிநீரை காலை மற்றும் இரவு என இரண்டு வேளை 14 நாட்கள் குடிக்கலாம். நோய் அறிகுறிகள் தெரிந்தால் கபசுர நீர் குடிக்கலாம். தொற்று ஏற்பட்டது உறுதியானால் இணை மருந்தாக ஆடாதொடை மணப்பாகு எடுத்துக்கொள்ளலாம். எதுவாயினும் மருத்துவரின் ஆலோசனையின் பேரிலேயே உட்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தது.