பிரதமர் மோடி நல்லா இருக்கணும்...! திருப்பரங்குன்றத்தில் ஹோமம் நடத்திய பாஜகவினர்...
ஆறுமுகப் பெருமானின் அறுபடை வீடு ஆன திருப்பரங்குன்றத்தில் அயராது பாடுபடும் அன்புத் தலைவர் பாரதப் பிரதமர் மோடியின் நலம் நாடி மிருத்தியுஞ்சய ஹோமம் நடைபெற்றது - அண்ணாமலை
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 5ஆம் தேதி 42,750 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் இருந்து சாலை மார்க்கமாக பெரோஸ்பூருக்கு சென்ற போது வழியில் திடீரென விவசாயிகள் போராட்டம் நடத்தியதன் காரணமாக அங்குள்ள மேம்பாலம் ஒன்றில் சுமார் 20 நிமிடங்கள் பிரதமர் மோடி காத்திருக்க வைக்கப்பட்டிருந்தார். இதனால் அவருடைய பயணத் திட்டம் பாதியிலேயே கைவிடப்பட்டது.
அதுமட்டுமின்றி விமான நிலையத்திற்கு உயிருடன் வந்து சேர்ந்ததற்காக உங்கள் முதலமைச்சருக்கு நன்றி சொல்லுங்கள் என பிரதமர் மோடி அதிகாரிகளிடம் கூறியதாகவும் தகவல் வெளியானது.
பிரதமரின் பாதுகாப்பில் குறைபாட்டை ஏற்படுத்திய பஞ்சாப் மாநில அரசு மீது பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். ஆனால் 7000 நாற்காலிகள் போடப்பட்டிருந்தது. கூட்டத்திற்கு 700 பேர்தான் வந்திருந்தார்கள். அதனால்தான் பிரதமரின் பயணம் பாதியில் கைவிடப்பட்டது. மாநில அரசின் பாதுகாப்பில் எந்தவித குறைபாடும் இல்லை. இதை பாஜகவினர் அரசியலாக்குகிறார்கள் என பஞ்சாப் முதலமைச்சர் குற்றஞ்சாட்டியிருந்தார்.
ஆறுமுகப் பெருமானின் அறுபடை வீடு ஆன திருப்பரங்குன்றத்தில் அயராது பாடுபடும் அன்புத் தலைவர் பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களின் நலம் நாடி மிருத்தியுஞ்சய ஹோமம் நடைபெற்றது.#LonglivePMModi#ModiJiJiyoHazaroSaal pic.twitter.com/I72qDjp2ou
— K.Annamalai (@annamalai_k) January 7, 2022
இதனையடுத்து, பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதால், பிரதமர் மோடியின் நீண்ட ஆயுளுக்காகவும், பாதுகாப்புக்காகவும், நாடு முழுவதும், பாஜகவினர் கோவில்களில் விஷேச பூஜைகள் மற்றும் சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபட்டுள்ளனர்.
அந்தவகையில் திருப்பரங்குன்றத்திலும் இன்று மோடியின் நலனுக்காக ஹோமம் நடத்தப்பட்டது. இந்த ஹோமத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆறுமுகப் பெருமானின் அறுபடை வீடு ஆன திருப்பரங்குன்றத்தில் அயராது பாடுபடும் அன்புத் தலைவர் பாரதப் பிரதமர் மோடியின் நலம் நாடி மிருத்தியுஞ்சய ஹோமம் நடைபெற்றது” என பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: அரை மணி நேர கேப்.. ஒரே கும்பல்.. அடுத்தடுத்து இரண்டு கொலை.! செங்கல்பட்டை அதிர வைத்த சம்பவம்!