சொகுசு காருக்கு வரிவிலக்கு கோரிய வழக்கில் மேல்முறையீடு - நடிகர் விஜயின் கோரிக்கை ஏற்பு
சொகுசு கார் வரிவிலக்கு கோரிய வழக்கில் அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து, தீர்ப்பு நகலின்றி தனது மேல்முறையீட்டு மனுவை ஏற்க வேண்டும் என்ற நடிகர் விஜயின் கோரிக்கை மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

சொகுசு காருக்கு வரிவிலக்கு கோரிய வழக்கில் ரூபாய் 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்தும், தன் மீதான தனி நீதிபதியின் விமர்சனத்தை நீக்க கோரியும் நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மேலும், தீர்ப்பு நகல் இன்றி விசாரணைக்கு தனது மேல்முறையீட்டு மனுவை ஏற்க வேண்டும் என்றும் நடிகர் விஜய் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. மேலும், இந்த வழக்கின் விசாரணையை வரும் திங்கட்கிழமை ஒத்திவைக்க வேண்டும் என்றும் நடிகர் விஜய் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. நடிகர் விஜயின் இந்த கோரிக்கையை ஏற்று, நடிகர் விஜயின் மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு பட்டியலிடும்படி பதிவுத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.