மேலும் அறிய

ராணுவ தலைமை தளபதி பயணித்த ஹெலிகாப்டர் விபத்து: நீலகிரி விரைகிறார் முதல்வர் ஸ்டாலின்; உயர் சிகிச்சை அளிக்க உத்தரவு

குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் நீலகிரி செல்கிறார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் நீலகிரி செல்கிறார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில், அடர் பனிமூட்டம் காரணமாக ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது. காட்டேரி என்ற இடத்தில் நடந்த விபத்தில் 14 பேர் பயணித்ததாகத் தகவல் வெளியான நிலையில், 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளனர். படுகாயமடைந்த நிலையில் 3 பேர் மீட்கப்பட்டு வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அதில் பயணித்த முப்படைகளின் ராணுவத் தளபதி பிபின் ராவத் என்ன ஆனார் என்பது குறித்து இதுவரை தெரியவில்லை.

இந்நிலையில் நிலைமை குறித்து நீலகிரி ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் விசாரித்தார். மேலும், மீட்புப் பணிகள் தொடர்பாக ஆய்வு செய்ய இன்று மாலை 5 மணிக்குத் தனி விமானம் மூலம் முதல்வர் ஸ்டாலின் கோவை செல்கிறார். அங்கிருந்து குன்னூர் சென்று, விபத்து நடந்த பகுதியை நேரில் பார்வையிட உள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்கவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாகத் தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு ஏற்கெனவே கோவை சென்றுள்ளார். மேலும் கோவை அரசு மருத்துவமனை மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனையில் இருந்து 10 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு குன்னூர் செல்கிறது. அதேபோல் இரு மருத்துவமனைகளிலும் அவசர நிலை கருதி சிகிச்சைக்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விபத்தை அடுத்து, ராணுவத்தின் 15 பேர் கொண்ட குழு, சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளது. இதற்கிடையே முப்படைகளின் ராணுவத் தளபதி பிபின் ராவத் விபத்தில் என்ன ஆனார் என்ற விவரம் இதுவரை வெளியாகாத நிலையில், டெல்லியில் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். 

மத்திய அமைச்சரவைக் கூட்டம் முடிந்த நிலையில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விவரம் தொடர்பாக இன்று மாலை 4 மணி அளவில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற உள்ளது. 

மேலும் படிக்க..

Chopper Crash | பிரதமருடன் அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை; விபத்து குறித்து விளக்கியதாகத் தகவல்

Coonoor Chopper Crash | குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் 13 பேர் உயிரிழப்பு; ஆண் ஒருவருக்குத் தீவிர சிகிச்சை

Military Plane Crashes | இரண்டு வருடங்களில் 7...சமீப ஆண்டுகளில் நடந்த படுபயங்கர ராணுவ விமான விபத்துக்களின் பட்டியல்..

Coonoor Chopper Crash | முப்படை தளபதி சென்ற ஹெலிகாப்டர் விபத்து... முதலில் நேரில் பார்த்தவர் என்ன சொல்கிறார்?

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather: 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
சீமான்  நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
சீமான் நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய  அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Anbumani :
Anbumani : "TNPSC, TRB மூலம் ஆசிரியர், அரசு ஊழியர்கள் தேர்வு; அரசு மூடி மறைப்பது ஏன் ?" அன்புமணி கேள்வி
Embed widget