மேலும் அறிய

Senthil Balaji : மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் மின்சாரம் ரத்தா..? அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்..

சென்னையில் தாழ்வான பகுதிகளில் மின்மாற்றிகளின் உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

சென்னையில் தாழ்வான பகுதிகளில் மின்மாற்றிகளின் உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:

மின்கசிவு ஏன்..?

சீர்காழியில் மழையால் பாதிக்கப்பட்ட மின் நுகர்வோர்களுக்கும் 36 மணி நேரத்திற்குள் சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளன. அங்கு பழுதடைந்த மின் கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளன. தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து கூடுதலாக பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் தாழ்வான பகுதிகளில் மின்மாற்றிகளின் உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளது

அவர்களுக்கு உரிய பாராட்டுகளையும் நன்றியையும் இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். 
சென்னை அசோக்நகரில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மின்கசிவு ஏற்பட்டது குறித்து கேட்கிறீர்கள்.
அந்தப் பள்ளிக்கு மின்சார வாரியம் மின்விநியோகம் அளித்ததில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஒயரிங் செய்ததில் தான் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. 

இந்தச் சம்பவத்தை அடுத்து, பள்ளிக் கல்வித் துறை சார்பில் அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் இதுபோன்ற நிலை இருக்கிறதா என்று சோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை மழை பெய்தாலும் மின்சாரம் துண்டிக்கப்படாமல் இருப்பதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

மின் துண்டிப்பு இல்லை

வடசென்னை பகுதி வரை சென்று நண்பர் ஒருவர் மின்சாரத் துண்டிப்பு ஏற்பட்டுள்ளதா என்று சரிபார்த்தார். எங்கேயும் அதுபோன்று ஏற்படவில்லை. பத்திரிகையாளர் நண்பர் ஒருவர் கூட அவரது வீட்டில் மின்சார துண்டிப்பு ஏற்படவில்லை என்று ஆச்சரியத்துடன் கூறினார். மழைக்காலங்களில் அனைத்து மின்நுகர்வோருமே கவனமாக இருக்க வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

விரைவில் ரேஷன் கடைகளில் கருவிழி மூலம் பொருட்கள் வழங்கும் திட்டம் - அமைச்சர் சக்கரபாணி

ஆதார் எண் இணைப்புக்கு குறுஞ்செய்தி

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
மின் இணைப்புப் பெற்றவர்கள் இறந்திருந்தால் பெயரை மாற்றுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படும். மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் மின் விநியோகம் ரத்து என்ற தகவல் தவறானது. 
கர்நாடகத்திலும் மின் கட்டணம் ஆண்டுதோறும் உயர்த்தப்படுகிறது" என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

இதனிடையே, நியாய விலை கடைகளில் கருவிழி மூலம் பொருட்கள் வாங்கும் திட்டம் விரைவில் கொண்டுவரப்படும் என திருவாரூரில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறினார்.

புதிய குடும்ப அட்டை : 

திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு நெல் சேமிப்பு கிடங்கை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறியதாவது:

15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி 15 நாட்களில் வழங்கப்பட்டு வருகிறது. ஆட்சிக்கு வந்து 18 மாதங்களில் 13 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு புதிதாக குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் பயிர் காப்பீடு 15 ஆம் தேதி முடிவடைந்த நிலையில் இந்த மாதம் 30 ஆம் தேதி வரை நீடிக்க வேண்டுமென மத்திய அரசுக்கு  கடிதம் அனுப்பபட்டுள்ளது. ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக ஒரு வாரத்தில் 186 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் 54 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியை விட நான்கு மடங்கு அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்கள்  குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்டை மாநிலங்களுக்கு அரிசி கடத்தப்படுவது  தடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget