4 மாவட்ட மக்களே!! மிக கனமழை எச்சரிக்கை - வானிலை மையம் கொடுத்த முக்கிய அப்டேட்!
தமிழகத்தில் நாளை 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நாளை 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நேற்று பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைவிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது, இன்று காலை தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
அதற்கடுத்த இரு தினங்களில் தமிழகம் - இலங்கை கடற்கரை நோக்கி நகரக்கூடும்.
இன்றைய தினத்தை பொருத்தவரை தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளைய தினம் கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும் உள் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். மயிலை, நாகை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடலூர், விழுப்புரம், அரியலூர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொருத்தவரை 24 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலையில் லேசான பனிமூட்டம் இருக்கும். சில பகுதிகளில் லேசான மழை இருக்கும்” எனத் தெரிவித்துள்ளது.