ஆஃபிஸ் போறீங்களா? 10 மணிவரை.... 17 மாவட்டங்களில் கனமழை! குடை எடுத்துட்டு போங்க! எங்கெல்லாம் தெரியுமா?
சென்னையில் தொடர் மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. ஆங்காங்கே மரங்களும் வேரோடு சாய்ந்து விழுந்துள்ளன
தமிழ்நாட்டில் சென்னை உட்பட 17 மாவட்டங்களில் காலை 10 மணிக்குள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், தஞ்சை, திருவார்ரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நேற்று இரவு முதல் சென்னையில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் சென்னையில் தொடர் மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. ஆங்காங்கே மரங்களும் வேரோடு சாய்ந்து விழுந்துள்ளன.
சென்னையில் மட்டுமில்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில், அதிகபட்சமாக நெய்வேலியில் 11 செமீ மழை பதிவாகியுள்ளது. காஞ்சிபுரம் ஹிந்துஸ்தான் பல்கலை கழகத்தில் 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சென்னை எண்ணூர் துறைமுகம் 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
செம்பரம்பாக்கத்தில் 8 செ.மீ, அண்ணா பல்கலை 8 செ.மீ, அரியலூர் 5 செமீ, சத்தியபாமா பல்கலை பகுதியில் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. வில்லிவாக்கத்தில் 5 செ.மீ, ஏசிஎஸ் மருத்துவ கல்லூரி பகுதியில் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
பெரம்பலூரில் 4 செ.மீ, நுங்கம்பாக்கம் 4 செ.மீ, மீனம்பாக்கம் 4 செ.மீ, செங்கல்பட்டு 3 செ.மீ, விருதாச்சலம் 3 செ.மீ, மழை பதிவாகியுள்ளது.
இதனிடையே சென்னையில் அடுத்த ஒரு மணிநேரத்துக்கு மழை தொடர்ந்து பெய்யும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நீண்ட நாட்களுக்கு பிறகு 10 செ.மீ மழை பெய்துள்ளது தெரியவந்துள்ளது.
What a day for Tamil Nadu and KTCC. For Chennai, there was one evening spell and then the 2nd spell after mid-night to early morning.
— Tamil Nadu Weatherman (@praddy06) August 5, 2024
This is just a start daily Damal Dumeels to continue across Tamil Nadu in leeward side. pic.twitter.com/hh0CjGpfNR
சோழிங்க நல்லூரில் 12 செ.மீ, கேளம்பாக்கத்தில் 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அடையார் 10 செ.மீ, எண்ணூர் 9.2 செ.மீ, கத்திவாக்கம் 8.7 செ.மீ, கிண்டி 8.6 செ.மீ, செம்பரம்பாக்கம் 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் 7.4 செ.மீ, காஞ்சிபுரத்தில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது.