மேலும் அறிய

MK Stalin : “அழிக்க நினைக்கின்றீர்களா? நாம் தமிழர்! – முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு அறிவிப்பு..!

பிறக்­கும்­போதே தாய்ப்­பா­லு­டன் தமிழ்ப்­பா­லும் சேர்த்து ஊட்­டப்­பட்­ட­வர்­கள் நாம். இறக்­கும் வரை­யில் தமிழ் உணர்வு அழி­யாது. தமிழை அழிக்க நினைப்­ப­வர்­க­ளை­யும் விட­மாட் டோம். - முதல்வர் ஸ்டாலின்

இந்தி திணிப்பை எதிர்த்து 1937 – 39ல் நடைபெற்ற மொழிப் போர் போல, இந்தி மொழியை திணித்தால் மீண்டும் அதேபோன்றதொரு களத்திற்கு செல்ல தயார் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் எழுதிய மடல்

இந்­தியை தி.மு.க. ஏன் இன்­ன­மும் எதிர்க்­கி­றது என்று நம்மை நோக்­கிக் கேட்­ப­வர்­க­ளுக்கு, உங்­க­ளில் ஒரு­வ­னான நான் அன்­போடு சொல்­லக்­கூ­டிய பதில், “இன்­ன­மும் நீங்­கள் அதைத் திணிப்­ப­தால்­தான், நாங்­கள் அதனை எதிர்க்­கி­றோம்” என்­பதே. திணிக்­கா­விட்­டால், எதிர்க்­க­மாட்­டோம். அதைத் தடுக்க மாட்­டோம். தமிழ்­நாட்­டில் இந்தி எழுத்­து­களை அழிக்­க­மாட்­டோம்.தமி­ழர்­க­ளின் தனித்­து­வ­மான குணம் என்­பது சுய­ம­ரி­யாதை உணர்வு. அதனை சீண்­டிப் பார்க்க எவர் நினைத்­தா­லும் அனு­ம­திக்க மாட்­டோம்.

“ரயில் நிலை­யங்­க­ளில் உள்ள இந்தி எழுத்­து­களை அழித்­து­விட்­டால் வட­மா­நி­லப் பய­ணி­கள் எப்­படி ரயில் நிறுத்­தங்­களை அடை­யா­ளம் காண்­பார்­கள்?’’ என்று இங்­கே­யுள்ள பா.ஜ.க. நிர்­வா­கி­கள் சிலர் கேட்­கி­றார்­கள். அவர்­க­ளு­டைய இந்த உணர்வு நியா­ய­மாக தமிழ் மீது இருந்­தி­ருக்க வேண்­டும்.

மோடியிடம் கேளுங்கள் – முதல்வர் ஆவேசம்

நம்­மைக் கேட்­ப­தற்கு பதில், பிர­த­மர் நரேந்­திர மோடி அவர்­க­ளி­ட­மும், இந்­தித் திணிப்­பில் தீவி­ர­மாக இருக்­கும் ஒன்­றிய உள்­துறை அமைச்­சர் அமித்ஷா, ஒன்­றிய கல்வி அமைச்­சர் தர்­மேந்­திர பிர­தான் யாதவ் ஆகி­யோ­ரி­ட­மும், “காசி தமிழ்ச் சங்­க­மம் என்று நடத்­து­கி­றீர்­களே, கும்­ப­மேளா நடக்­கி­றதே,அதற்கு தமிழ்­நாட்­டி­லி­ருந்­தும் தென் மாநி­லங்­க­ளில் இருந்­தும் உத்­த­ரப்­பி­ர­தே­சம் செல்­லும் பய­ணி­கள் புரிந்­து­கொள்­ளும் வகை­யில் தமிழ் உள்­ளிட்ட திரா­விட மொழி­க­ளில் பெயர்ப்­ப­ல­கை­களை வைத் தி­ருக்­கி­றீர்­களா? இந்­தி­யா­வில் உள்ள மாநில மொழி­க­ளைச் சம­மாக மதித்து அறி­விப்­பு­க­ளைச் செய்­கி­றீர்­களா?”என்­றல்­லவா கேட்­டி­ருக்க வேண்­டும்?

 

வஞ்சிக்க நினைப்பவர்கள் குரல் கொடுப்பார்களா?

தமிழ்ப் பகை­யையே கொள்­கை­யா­கக் கொண்டு, தமிழ்­நாட்­டைத் தொடர்ந்து வஞ்­சிக்­கும் இயக்­கத்­தில் இணைந்­தி­ருப்­ப­வர்­கள் தமி­ழுக்­காக– தமி­ழர் நல­னுக்­காக எப்­படி குரல் கொடுப்­பார்­கள்? திரா­விட இயக்­கத்­திற்கு எந்த மொழி மீதும் பகை கிடை­யாது.தமிழ், வேறு எந்த மொழி­யை­யும் எதி­ரி­யா­கக் கருதி அழித்­த­தில்லை. பிற மொழி­கள் தன் மீது ஆதிக்­கம் செலுத்த நினைத்­தால் அதனை ஒரு­போ­தும் அனு­ம­தித்­த­தில்லை.அவற்றை விரட்­டி­ய­டிக்­கும் என்­ப­து­தான் நமது பண்­பாட்டு வர­லாறு.

சமஸ்கிருதம் கற்றுக் கொடுத்தவர்கள் திராவிட இயக்கத் தலைவர்கள்

திரா­விட இயக்­கத்­தின் முதல் அர­சி­யல் அமைப்­பான நீதிக்­கட்­சியை உரு­வாக்­கிய தலை­வர்­க­ளில் ஒரு­வ­ரான பிட்டி. தியா­க­ரா­யர் அவர்­கள் தனது இல்­லத்­தி­லேயே சமஸ்­கி­ரு­தம் உள்­ளிட்ட பாடங்­க­ளைப் படிக்க விரும்­பு­கி­ற­வர்­க­ளுக்கு சாதி­பே­தம் பார்க்­கா­மல் அதற்­கு­ரிய ஏற்­பா­டு­க­ளைச் செய்து கொடுத்­த­வர்.

நீதிக்­கட்சி ஆட்­சி­யின் முதல் அமைச்­ச­ரா­கப் பொறுப்­பேற்று வகுப்­பு­வாரி இட­ஒ­துக்­கீட்­டிற்­கான அர­சா­ணை­யைப் பிறப்­பித்­த­வ­ரும், இந்து அற­நி­லை­யச் சட்­டத்தை உரு­வாக்­கி­ய­வ­ரு­மான பன­கல் அர­சர் இரா­ம­ராய நிங்­கர் அவர்­கள் சமஸ்­கி­ரு­தத்­தில் உரை­யாற்­றக் கூடிய அள­விற்கு அந்த மொழியை அறிந்­தி­ருந்­த­வர்.

அந்த நீதிக்­கட்­சி­யின் தலை­வ­ராக இருந்த ஏ.டி.பன்­னீர்­செல்­வம் அவர்­க­ளும், மறை­ம­லை­ய­டி­கள் போன்ற தமி­ழ­றி­ஞர்­க­ளும், தந்தை பெரி­யா­ரின் சுய­ம­ரி­யாதை இயக்­கத்­து­டன் இணைந்து நின்று 1937 முதல் 1939 வரை­யி­லான கால­கட்­டத்­தில் முதல் இந்தி ஆதிக்க எதிர்ப்­புப் போராட்­டத்­தில் முதன்­மை­யாக நின்­ற­னர். கார­ணம், சென்னை மாகா­ணத்­தில் இருந்த பள்­ளி­க­ளில் மூத­றி­ஞர் ராஜாஜி அவர்­கள் தலை­மை­யி­லான அரசு இந்­தி­யைக் கட்­டா­யப் பாட­மாக்கி, வலிந்து திணித்­த­தால்­தான்.

சென்னை மாகா­ண­மாக இருந்த அன்­றைய தமிழ்­நா­டெங்­கும் ஆதிக்க இந்­திக்கு எதி­ராக கண்­ட­னக் கூட்­டங்­கள் நடை­பெற்­றன. மாநா­டு­கள் நடத்­தப்­பட்­டன. துறை­யூ­ரில் 1937ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் நாள் நடை­பெற்ற சுய­ம­ரி­யாதை மாநாட்­டிற்­குத் தலை­மை­யேற்­ற­வர் 28 வயது இளை­ஞ­ரான அறி­ஞர் அண்ணா அவர்­கள்.

அந்த மாநாட்­டில் தலை­மை­யு­ரை­யாற்­றும்­போது, “எந்த ஆட்சி வந்­தா­லும் சரி, தமி­ழர் காப்­பாற்­றிக் கொள்ள வேண்­டி­ய­வை­கள் சில உள்­ளன” என்­றார் அண்ணா. தமி­ழ­ரின் ஜீவ­நா­டி­யாக இருப்­ப­தில் முதன்­மை­யா­னது என்று அண்ணா குறிப்­பிட்­டது தமிழ்­மொ­ழி­யைத்­தான்.

நாம் தமிழர் என்று காட்டுவது இதுதான்

“நாம், தமி­ழர் என்­ப­தைக் காட்­டு­வது தமிழ்­மொ­ழி­தான். இதற்கு ஆபத்து வந்­து­விட்­டால் நமது ஒற்­றுமை, கலை, நாக­ரி­கம் யாவும் நாசம். ஆகவே தமி­ழைக் காப்­பாற்­றுங்­கள்”என்று தந்தை பெரி­யா­ரின் தள­ப­தி­யான பேர­றி­ஞர் அண்ணா அறை­கூ­வல் விடுத்­தார்.

தாய்­மொ­ழி­யைக் காத்­திட தமிழ்­நாடு திரண்­டது. இன்­றைய தமிழ்­நாட்டு பா.ஜ.க.வினர் இந்­தி­யை­யும் சமஸ்­கி­ரு­தத்­தை­யும் உயர்த்­திப் பிடித்து, ‘பிறப்­பொக்­கும் எல்லா உயிர்க்­கும்’ என்ற சமூக நீதித் தத்­து­வத்­தைக் கொண்ட தமி­ழைப் பின்­தள்ள நினைக்­கும் எண்­ணம் கொண்­ட­வர்­கள் அப்­போ­தும் இருந்­தார்­கள்.

இந்தி மொழி­யைக் கட்­டா­யப் பாட­மாக்­கிய அன்­றைய இரா­ஜாஜி அர­சின் செயலை வர­வேற்­ற­து­டன், மேல்­நிலை வகுப்­பு­க­ளில் சமஸ்­கி­ரு­தத்தை விருப்­பப் பாட­மாக வைக்க வேண்­டும் என்று பத்­தி­ரி­கை­க­ளில் தலை­யங்­கங்­கள் எழு­தப்­பட்­டன. காங்­கி­ரஸ் தலை­வ­ரான சத்­தி­ய­மூர்த்தி அவர்­கள்,

“வரு­ணா­சி­ரம தர்­மம் காப்­பாற்­றப்­ப­ட­வும், கிராம ராஜ்­ஜி­யம்ஏற்­ப­ட­வும் வட­மொ­ழியை – சமஸ்­கி­ரு­தத்­தைக் கட்­டா­யப் பாடம் ஆக்க வேண்­டும்” என்று கூறி­னார். இவற்­றை­யெல்­லாம் எதிர்த்­து­தான் பெரி­யார் தலை­மை­யில் போராட்­டக் களம் புகுந்­த­னர் தமி­ழர்­கள்.

உள்நோக்கத்தோடு இந்தி மொழி திணிப்பு

மும்­மொ­ழிக் கொள்கை என்றபெய­ரில் இந்­தியை முத­லில் நுழைத்து, அத­னைத் தொடர்ந்து சமஸ்­கி­ரு­தத்­தை­யும் திணித்து, தமி­ழை­யும் தமி­ழர் பண்­பாட்­டை­யும் சிதைக்க நினைக்­கும் ஒன்­றிய பா.ஜ.கஅர­சி­னு­டைய திட்­டத்­தின் உள்­நோக்­கத்­தைப் புரிந்து கொண்டு தமிழ்­நாடு முழு­வீச்­சாக இன்­றைக்கு எதிர்க்­கி­றதுஎன்­றால், அதற்­கான அடித்­த­ளத்­தைத் திரா­விட இயக்­கத் தலை­வர்­கள் அன்­றைக்கே வலு­ வா­கக் கட்­ட­மைத்­தி­ருக்­கி­றார்­கள்.

தமிழ் வளர்த்த அறி­ஞர்­க­ளான மறை­ம­லை­ய­டி­கள், முத்­த­மிழ்க் காவ­லர் கி.ஆ.பெ.விசு­வ­நா­தம், தமி­ழ­வேள் உமா மகே­சு­வ­ர­னார்,நாவ­லர் சோம­சுந்­தர பார­தி­யார் உள்­ளிட்ட பல­ரும் தாய்­மொ­ழி­யைக் காப்­ப­தற்­காக, தந்தை பெரி­யார் அவர்­கள் முன்­னெ­டுத்த இந்தி ஆதிக்க எதிர்ப்பு அறப்­போ­ராட்­டத்­தில் பங்­கேற்­ற­னர்.

திராவிட இயக்க தியாக வரலாறு

ஒன்­றிய அர­சின் அலு­வ­ல­கங்­கள் முன்­பாக தமிழ்­நாடு மாண­வர் கூட்­ட­மைப்பு நடத்­திய கண்­ட­னப் பேரணி என்­பது, சென்னை செள­கார்­பேட்டை இந்து தியா­லா­ஜிக்­கல் பள்­ளி­யின் முன் 1938ஆம் ஆண்டு நவம்­பர் 14 அன்று ஆண்­க­ளும் பெண்­க­ளு­மாக நடத்­திய ஆர்ப்­பாட்­டத்­தின் இன்­றைய பதிப்பு போல் இருந்­தது. அப்­போது நடந்த போராட்­டத்­தில் டாக்­டர் தர்­மாம்­பாள், மூவ­லூர் இரா­மா­மிர்­தம் அம்­மை­யார், மலர்­­முகத்­தம்­மை­யார், பட்­டம்­மாள், சீத்­தம்­மாள் ஆகிய 5 பெண்­க­ளும் கைது செய்­யப்­பட்­ட­னர். இவர்­க­ளில் சீத்­தம்­மாள்தனது மூன்றுவயது மகள் மங்­கை­யர்க்­க­ரசி, ஒரு வயது மகன் நச்­சி­னார்க்­கி­னி­யன் ஆகி­யோ­ரு­டன் கைதாகி சிறை சென்­றார் என்­பது திரா­விட இயக்­கத்­தின் தியாக வர­லாறு.

ஆண்–­­பெண் பேத­மின்றி தமிழ்­மொழி காத்­திட சிறை­பு­குந்த மன உறு­தி­மிக்க அந்­தப் போராட்ட உணர்வு இன்­றைக்­கும் தேவைப்­ப­டு­கி­றது என்­பதை ஒன்­றிய பா.ஜ.க அர­சின் தொடர்ச்­சி­யான தமிழ் விரோதச் செயல்­பா­டு­கள் எடுத்­துக்­காட்­டு­கின்­றன. 1938ஆம் ஆண்டு தொடர்ச்­சி­யாக நடந்த இந்தி ஆதிக்க எதிர்ப்­புப் போராட்­டத்­தில் கழக முன்­னோ­டி­யான என்.வி.நட­ரா­ச­னின் துணை­வி­யார் புவ­னேஸ்­வரி, தன் கைக்­கு­ழந்­தை­யான சோம­சுந்­த­ரத்­து­டன் கைதாகி சிறை சென்­றார். அந்­தக் குழந்தை சோம­சுந்­த­ரம்­தான், பின்­னா­ளில் என்.வி.என்.சோமு என அறி­யப்­பட்ட கழ­கத்­தின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் இந்­திய ஒன்­றிய இணை­ய­மைச்­ச­ரா­க­வும் இருந்­த­வர்.

அழிக்க நினைப்பவர்களை விட மாட்டோம்

பிறக்­கும்­போதே தாய்ப்­பா­லு­டன் தமிழ்ப்­பா­லும் சேர்த்து ஊட்­டப்­பட்­ட­வர்­கள் நாம். இறக்­கும் வரை­யில் தமிழ் உணர்வு அழி­யாது. தமிழை அழிக்க நினைப்­ப­வர்­க­ளை­யும் விட­மாட் டோம்.

இன்­னொரு மொழிப்­போர் நம் மீது திணிக்­கப்­பட்­டால், 1937ல் தொடங்கி 1939 வரை நடந்த முதல் இந்தி ஆதிக்க எதிர்ப்­புப் போரில், தமி­ழைக் காப்­ப­தற்­காக சிறைக் கொடு­மைக்­குள்­ளாகி, உடல்­ந­லி­வுற்ற நிலை­யி­லும் மன்­னிப்பு கேட்க மறுத்து,தன் இன்­னு­யிர் ஈந்த நட­ரா­சன், தாள­முத்து எனும் மாவீ­ரர்­களை நெஞ்­சில் ஏந்தி, களம் புகு­வோம். சட்­டத்­தின் முன்­பும் நீதி­யின் முன்­பும் தாய்­மொழி உணர்வை நிலை­நாட்டி, தமி­ழைக் காப்­போம்.!

தாழ்ந்ததமி­ழ­கத்தை நிமிர்த்தி உயர்த்­தி­யது திரா­விட இயக்­கம். தமிழ்­நாட்­டின் வளர்ச்­சி­யைத் தடுக்­கும் வஞ்­ச­கத்­தைத் தொடர்­கி­றது ஒன்­றிய பா.ஜ.க. அர­சாங்­கம்.

வஞ்­ச­கத்தை எதிர்த்­தி­ட­வும், வள­மான தமிழ்­நாட்­டைப் பாது­காத்­தி­ட­வும், மாநில உரி­மைக்­கான குர­லு­டன் தாய்­மொழி காத்­தி­டும் முழக்­கத்­தை­யும் முன்­னி­றுத்­து­ வோம். ஆதிக்க மொழி­யால் இந்­திய மொழி­கள் பல அழிக்­கப்­பட்ட வர­லாற்­றைப் பார்ப்­போம்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகள் அனுபவம். கள செய்தியாளர், கண்டண்ட் ரைட்டர், அசைன்மெண்ட் பொறுப்பாளர், டிக்கர் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் வெற்றிகரமாக பணியாற்றியவர் / பணியாற்றி வருபவர். கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதியும், அரசியல், நிர்வாக, கலை ஆளுமைகளின் நேர்காணல் எடுத்தும் வருபவர். தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி தேர்வு விடைதாள் முறைகேடு, மத்திய அரசுகளின் தேர்வுகளில் தமிழ் புறக்கணிப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கியமான செய்திகளை பிரத்யேகமாக வழங்கியவர்.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

ஹாப்பி! இனி வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.. தேதியை குறிச்சுக்கோங்க மக்களே
ஹாப்பி! இனி வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.. தேதியை குறிச்சுக்கோங்க மக்களே
ஸ்டாலின், உதயநிதியிடம் முறையிட்டும் பயனில்லை.. 7 வருஷம் போலீஸ் வேலைக்கு போராடும் திருநங்கை
ஸ்டாலின், உதயநிதியிடம் முறையிட்டும் பயனில்லை.. 7 வருஷம் போலீஸ் வேலைக்கு போராடும் திருநங்கை
Superman Review: சூப்பர் மேனை காப்பாற்றினாரா ஜேம்ஸ் கன்? டிசி யுனிவெர்ஸ் தப்பி பிழைக்குமா? ட்விட்டர் விமர்சனம்
Superman Review: சூப்பர் மேனை காப்பாற்றினாரா ஜேம்ஸ் கன்? டிசி யுனிவெர்ஸ் தப்பி பிழைக்குமா? ட்விட்டர் விமர்சனம்
IND Vs ENG Lords Test: ”போர் அடிக்குது, பேஸ்பால் கிரிக்கெட் எங்க?” - சொந்த மண்ணிலேயே இங்கி., கலாய்த்த இந்திய கேப்டன்
IND Vs ENG Lords Test: ”போர் அடிக்குது, பேஸ்பால் கிரிக்கெட் எங்க?” - சொந்த மண்ணிலேயே இங்கி., கலாய்த்த இந்திய கேப்டன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்
Pothupani Thilagam | ’நீர்வளத்துறையில் முறைகேடு?’ துரைமுருகனுக்கே விபூதி அடித்த பொதுப்பணி திலகம்!
EPS with Amit Shah | களம் இறங்கும் அமித்ஷா உறுதி அளித்த நயினார்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்
BJP தேசிய தலைவராகும் தமிழ்பெண்! வானதி OR நிர்மலாவுக்கு ஜாக்பார்ட்!மோடியின் கணக்கு என்ன?
கொத்தாக விலகிய தொண்டர்கள் அதிமுகவில் இணைந்த பாமகவினர்! அதிர்ச்சியில் அன்புமணி ராமதாஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஹாப்பி! இனி வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.. தேதியை குறிச்சுக்கோங்க மக்களே
ஹாப்பி! இனி வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.. தேதியை குறிச்சுக்கோங்க மக்களே
ஸ்டாலின், உதயநிதியிடம் முறையிட்டும் பயனில்லை.. 7 வருஷம் போலீஸ் வேலைக்கு போராடும் திருநங்கை
ஸ்டாலின், உதயநிதியிடம் முறையிட்டும் பயனில்லை.. 7 வருஷம் போலீஸ் வேலைக்கு போராடும் திருநங்கை
Superman Review: சூப்பர் மேனை காப்பாற்றினாரா ஜேம்ஸ் கன்? டிசி யுனிவெர்ஸ் தப்பி பிழைக்குமா? ட்விட்டர் விமர்சனம்
Superman Review: சூப்பர் மேனை காப்பாற்றினாரா ஜேம்ஸ் கன்? டிசி யுனிவெர்ஸ் தப்பி பிழைக்குமா? ட்விட்டர் விமர்சனம்
IND Vs ENG Lords Test: ”போர் அடிக்குது, பேஸ்பால் கிரிக்கெட் எங்க?” - சொந்த மண்ணிலேயே இங்கி., கலாய்த்த இந்திய கேப்டன்
IND Vs ENG Lords Test: ”போர் அடிக்குது, பேஸ்பால் கிரிக்கெட் எங்க?” - சொந்த மண்ணிலேயே இங்கி., கலாய்த்த இந்திய கேப்டன்
Joe Root: லார்ட்ஸின் ராஜா ஜோ ரூட்.. சத மழையும், ரன்மழையும்தான்.. வரலாறை பாருங்க ப்ரோ!
Joe Root: லார்ட்ஸின் ராஜா ஜோ ரூட்.. சத மழையும், ரன்மழையும்தான்.. வரலாறை பாருங்க ப்ரோ!
Maruti Suzuki Cars: எவனாலயும் முடியாது..! அடிமாட்டு விலைக்கு 3 கார்கள், சிம்பிளா 34 கிமீ மைலேஜ் - சிட்டிக்கு இதுதான் பெஸ்ட்
Maruti Suzuki Cars: எவனாலயும் முடியாது..! அடிமாட்டு விலைக்கு 3 கார்கள், சிம்பிளா 34 கிமீ மைலேஜ் - சிட்டிக்கு இதுதான் பெஸ்ட்
NASA Job: நாசாவே வேண்டாம், வேலையை விட்டு கிளம்பும் 2000+ பணியாளர்கள் - அப்படி என்ன தான் ஆச்சு?
NASA Job: நாசாவே வேண்டாம், வேலையை விட்டு கிளம்பும் 2000+ பணியாளர்கள் - அப்படி என்ன தான் ஆச்சு?
PMK Conflict:  வீட்டில் இல்லாத ராமதாஸ்! உள்ளே நுழைந்த அன்புமணி.. தைலாபுரத்தில் பரபரப்பு
PMK Conflict: வீட்டில் இல்லாத ராமதாஸ்! உள்ளே நுழைந்த அன்புமணி.. தைலாபுரத்தில் பரபரப்பு
Embed widget