மேலும் அறிய

விழுப்புரத்தில் வெளுத்து வாங்கிய கனமழை... நீரில் மூழ்கிய சாலைகள்: கடும் போக்குவரத்து பதிப்பு...

விழுப்புரம்: கனமழையால் மாற்றுச்சாலை தண்ணீரில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு

கனமழையால் மாற்றுச்சாலை தண்ணீரில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு... மாற்று வழித்தடத்தில் போக்குவரத்து வாகனங்கள் இயக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் அவதி...

விழுப்புரத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் குடை பிடித்துச் செல்வதும் சிலர் முகத்தில் முகப்பு கட்டி செல்வதுமாக இருந்தனர். விழுப்புரம் மாவட்டத்தின் விழுப்புரம் நகரபகுதி, திருக்கோவிலூர் மற்றும்  மரக்காணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியான கந்தாடு, முருக்கேரி, கூனிமேடு, பிரம்மதேசம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு கன மழை பெய்தது.

இந்த நிலையில் மரக்காணம் பகுதியில் கடந்த நான்கு மாதங்களாக சுமார் 3500 ஏக்கர் பரப்பளவில் நடைபெற்று பெற்று வந்த உப்பு உற்பத்தி பணிகள் நேற்று முதல் பெய்து வரும் மழையின் காரணமாக கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த கனமழை காரணமாக, பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் அதிகளவு தேங்கி நிற்கிறது. இதில் குறிப்பாக, மாம்பழப்பட்டு பகுதியில் விழுப்புரம் - திருக்கோவிலூர் இடையேயான பிரதான சாலையில், புதிதாக பாலம் கட்டப்பட்டு வரும் இடத்தில் உள்ள மாற்றுச் சாலை தண்ணீரில் மூழ்கியுள்ளது.

இந்த மாற்றுச் சாலை தண்ணீரில் மூழ்கியதால் அவ்வழியாக வாகனங்கள் செல்ல இயலாது என்று சாலையின் எந்தப் பக்கமும் நேற்றிரவு எச்சரிக்கை செய்யவில்லை. இதையடுத்து, மாற்றுச் சாலை தண்ணீரில் மூழ்கியது தெரியாமல் நேற்றிரவு பேருந்து, லாரி, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் சென்றன. பின்னர் மீண்டும் வந்த வழியே திரும்பின. சில வாகனங்கள் எந்த வழியாக செல்வது எனத் தெரியாமல் அங்கேயே நின்றன.  இதையடுத்து, இன்று காலை முதல் போக்குவரத்து வாகனங்கள் மாற்று வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பேருந்து பயணிகள் உள்ளிட்ட பொதுமக்கள் பல்வேறு சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Salem Power Shutdown: சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
Sabarimala: ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் -  புது அறிவிப்பு இதோ
ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் - புது அறிவிப்பு இதோ
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Embed widget