(Source: ECI/ABP News/ABP Majha)
Heavy rain alert: மயிலாடுதுறையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் காரணமாக மயிலாடுதுறையில் நாளை (நவம்பர் 14) பளளிகளுக்கும், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் காரணமாக மயிலாடுதுறையில் நாளை (நவம்பர் 14) பளளிகளுக்கும், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
3 days cumulative rainfall (mm) from 08:30 IST of 10/11/2022 to 08:30 IST of 13/11/2022 pic.twitter.com/DX2yCLKzAF
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) November 13, 2022
நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறையை அறிவித்து அந்த மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவு பிறப்பித்தார்.
முன்னதாக, தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, தேனி, தூத்துக்குடி, நெல்லை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், நீலகிரி, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, குன்றத்தூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது. நாளை 14.11.2022 மழையின் காரணமாக குன்றத்தூர் தாலுக்கா பகுதிகளில் (மாங்காடு உட்பட) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்
காற்றழுத்த தாழ்வு பகுதி :
நேற்று வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழந்து வட தமிழகம், புதுவை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 48 மணி நேரத்தில் தமிழக - கேரள பகுதிகளை கடந்து அரபிக் கடல் பகுதிகளில் செல்லக்கூடும்.
கரூரில் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், காரைக்கால், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், மதுரை, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சாத்தனூர் அணை நீர்மட்டம் உயர்வு; தென் பெண்ணை ஆற்றில் நீர் திறப்பால் வெள்ள அபாய எச்சரிக்கை
சென்னை
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.