”தனிமைப்படுத்திக்கொண்டிருக்கும் மக்களுக்கு மூன்று வேளையும் உணவு” - சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்

ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்பது வரவே வராது. 650 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளது. ஒரு நாளைக்கு 500 லிருந்து 550 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மட்டுமே தேவைப்படுகிறது.100 மெட்ரிக் டன் வரையில் கையிருப்பு உள்ளதால் ஆக்சிஜன் பற்றாக் குறையே இல்லை என்றார் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சு.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன் அவர்கள்  சென்னை சைதாப்பேட்டை பகுதியில்  கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைபடுத்திக் கொண்டிருக்கும் மக்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,”60 தன்னார்வலர்களைக் கொண்டு மொத்தம் 2480 வீடுகளுக்கு உணவளிக்கபட உள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3 வேளை உணவுகளை சைதை திமுக மற்றும் ஆனந்தம் கல்வி அறக்கட்டளை சார்பில் வழங்கப்படுகிறது. தன்னார்வலர்கள் இரு சக்கர வாகனங்களின் மூலம் உணவுகளை விநியோகம் செய்ய உள்ளனர். கோவையில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் ஆகியோரால் அதிகம் பரவுகிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தனி அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி இன்று பிற்பகல் 2 மணிக்கு நானும் சுகாதாரத்துறை செயலாளரும் கோவை செல்ல உள்ளோம்’ என்று கூறினார்.

வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கும் மக்களுக்கு மூன்று வேளையும் உணவு. ஜூன் 6 ஆம் தேதி தடுப்பூசிக்கான உலகளாவிய டெண்டர் இறுதி செய்யப்படும். சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் சுகாதாரத் துறைச் செயலர் இன்று ஆய்வுக்காக கோவை செல்ல உள்ளனர்.

மேலும், ‘ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்பது வரவே வராது. 650 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளது. ஒரு நாளைக்கு 500 லிருந்து 550 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மட்டுமே தேவைப்படுகிறது.100 மெட்ரிக் டன் வரையில் கையிருப்பு உள்ளதால் ஆக்சிஜன் பற்றாக் குறையே இல்லை.சென்னையில் 8 ஆயிரம் படுக்கைகள் காலியாக உள்ளது; வீடுகளில் தனிமைபடுத்தி உள்ளவர்கள் கூட தற்போது கொரோனா கேர் சிகிச்சை மையத்திற்கு அழைக்கப்படுகிறார்கள்.கடந்த 3 நாட்களில் கிராமபுரங்களில் தடுப்பூசி செலுத்துவதற்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 80 லட்சம் தடுப்பூசிகளில் 78 லட்சம் செலுத்தப்பட்டுள்ளது. 18 -44  வயதுவரை உள்ளவர்களுக்கு இதுவரை 14 லட்சம் தடுப்பூசிகள் மத்திய அரசு தரப்பில் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 26 லட்சம் தடுப்பூசி வர வேண்டியுள்ளது.18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆர்வமாக தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி சென்னையில் மாற்றுத்திறனாளிகள் அதிகம் உள்ள பகுதியில் தடுப்பூசி செலுத்த முகாம் அமைக்கப்பட்டுள்ளது.மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி சென்று தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. ஜூன் 6 ஆம் தேதி தடுப்பூசிக்கான உலகளாவிய டெண்டர் இறுதி செய்யப்படும்,தடுப்பூசி செலுத்துவதில் கிராமப்புறங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.விரைவில் 26 லட்சம் தடுப்பூசியை மத்திய அரசிடம் இருந்து கேட்டுப் பெற இருக்கிறோம் தடுப்பூசியை தமிழகத்தில் போட்டுக்கொள்ளாதவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்’,என்று கூறினார்.

Also Readதிறந்த ஒரே நாளில் உயிர்களை காவு வாங்கிய மையம்; ஆக்சிஜன் சப்ளை பாதிப்பால் 9 பேர் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு!:

Tags: Vaccine Corona COVID-19 Vaccination oxygen social distancing Cases Quarantine health minister

தொடர்புடைய செய்திகள்

#ArrestMadanop: யூ ட்யூபர் மதனுக்கு எதிராக தொடர்ந்து வலுக்கும் வலைதள பதிவுகள்..!

#ArrestMadanop: யூ ட்யூபர் மதனுக்கு எதிராக தொடர்ந்து வலுக்கும் வலைதள பதிவுகள்..!

TN Collectors appointment : 24 மாவட்டங்களுக்குப் புதிய ஆட்சியாளர்கள் நியமனம்!

TN Collectors appointment : 24 மாவட்டங்களுக்குப் புதிய ஆட்சியாளர்கள் நியமனம்!

செங்கல்பட்டு : ஒரு மாதத்தில் 1,058 நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பு..!

செங்கல்பட்டு : ஒரு மாதத்தில் 1,058 நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பு..!

காஞ்சிபுரம் : குறைகிறது கொரோனா தொற்று எண்ணிக்கை! 13 பேர் உயிரிழப்பு..!

காஞ்சிபுரம் : குறைகிறது கொரோனா தொற்று எண்ணிக்கை! 13 பேர் உயிரிழப்பு..!

Shankar Jiwal on Madhan : யூ ட்யூபர் மதன் மீது நிச்சயம் நடவடிக்கை - சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்!

Shankar Jiwal on Madhan : யூ ட்யூபர் மதன் மீது நிச்சயம் நடவடிக்கை - சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்!

டாப் நியூஸ்

IAS Officers Transfer : 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

IAS Officers Transfer : 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

ArrestMadanOP in Social Media : ட்ரெண்டாகும் #ArrestMadhanOP - மதனை கைது செய்யுங்கள்!

ArrestMadanOP in Social Media : ட்ரெண்டாகும் #ArrestMadhanOP - மதனை கைது செய்யுங்கள்!

PUBG Madan Accused : சிறுமிகளிடம் ஆபாச வார்த்தைகள், அத்துமீறல் : குற்றவரிசையில் கொடூர ஆன்லைன் கேமர் மதன்..!

PUBG Madan Accused : சிறுமிகளிடம் ஆபாச வார்த்தைகள், அத்துமீறல் : குற்றவரிசையில் கொடூர ஆன்லைன் கேமர் மதன்..!

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 14 ஆயிரமாக குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 14 ஆயிரமாக குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு