Governor Ravi: ஆளுநர் ரவி தலைமையில் அரசு, தனியார் பல்கலை. துணை வேந்தர்கள் மாநாடு; நாளை நடக்கிறது
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மாநாடு, உதகமண்டலம் ஆளுநர் மாளிகையில் நாளை (ஜூன் 5) நடைபெறுகிறது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மாநாடு, உதகமண்டலம் ஆளுநர் மாளிகையில் நாளை (ஜூன் 5) நடைபெறுகிறது.
’உயர் கல்வி நிறுவனங்களின் பாடப் புத்தகங்களை தமிழில் மொழி மாற்றம் செய்வது’ இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம் ஆகும். தமிழ் மொழியில் இல்லாத பாடப் புத்தகங்களைப் பல்கலைக்கழககங்கள் கண்டுபிடித்து தமிழில் மொழி மாற்றம் செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் இருக்கும் பல்கலைக்கழகங்களை கற்பித்தல் - கற்றல் முறையை ஊக்குவிக்க இந்த மாநாடு நடத்தப்படுவதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் ஆன்லைன் முறையில் மாநாட்டில் கலந்து கொண்டு பேச உள்ளார். துணை வேந்தர்கள் மாநாட்டை தமிழ்நாடு ஆளுநரும் பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி தொடங்கி வைக்க உள்ளார்.
பாரதிய பாஷா சமிதி தலைவர் சாமு கிருஷ்ண சாஸ்திரி, லக்னோ பல்கலைக்கழக துணைவேந்தர், இக்னோ (இந்திரா காந்தி திறந்த நிலை பல்கலைக்கழக) துணைவேந்தர் உள்ளிட்ட பலர் இந்த மாநாட்டில் கலந்துகொண்டு, அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுடன் பேச உள்ளனர்.
ஆளூநர் விருது- சமூக சேவை, சூழல் பாதுகாப்புக்கு விருது
2023ஆம் ஆண்டுக்கான ஆளுநர் விருது சமூக சேவை (SOCIAL SERVICE), சூழல் பாதுகாப்பு (ENVIRONMENT PROTECTION) ஆகிய துறைகளில் இயங்கும் ஆளுமைகளுக்கு வழங்கப்பட உள்ளது.
விருதுக்குத் தகுதியான நபர்கள் நாளை (ஜூன் 5) முதல் விண்ணப்பிக்கலாம். நபர்கள் ஜூலை 31ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
ஒவ்வொரு துறையிலும் 4 வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். 3 பேர் தனிப்பட்ட ஆளுமைகளாகவும் ஒரு நிறுவனத்துக்கும் விருது வழங்கப்பட வேண்டும். ஆளுமைகளுக்குத் தலா ரூ.2 லட்சமும் நிறுவனத்துக்குத் தலா ரூ.5 லட்சமும் வழங்கப்படும். குடியரசு தினத்தன்று (2024ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி) ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ரவி கையால் இந்த விருது வழங்கப்பட உள்ளது.
10 ஆண்டுகள் தொடர்ச்சியாகத் துறை சார்ந்து பணியாற்றியவர்களே இந்த விருதுக்கு விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி,
ஆளுநரின் துணைச் செயலாளர்
ஆளுநர் செயலகம்,
ஆளுநர் மாளிகை
சென்னை -600 022
இவ்வாறு ஆளுநர் மாளிகை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.