Tamil Nadu Corona Restrictions: 27 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
27 மாவட்டங்களில் ஜூன்28ஆம் தேதி காலை 6 மணி முதல் பேருந்துகள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
![Tamil Nadu Corona Restrictions: 27 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு Government of Tamil Nadu allow buses to operate in 23 districts Tamil Nadu Corona Restrictions: 27 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/26/b15196e73b3a06a51e6b5ea567b8af97_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாட்டில் சில தளர்வுகளுடன் ஜூலை 5ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டிருந்தார். இதில், மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில், வரும் 28ஆம் தேதி முதல் 50 சதவிகித பயணிகளுடன், ஏற்கெனவே அனுமதித்துள்ள 4 மாவட்டங்களுடன் கூடுதலாக 23 மாவட்டங்களில் பேருந்துகளை தமிழ்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. காலை 6 மணி முதல் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர், விருதுநகர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மாவட்டத்திற்குள்ளும், மாவட்டங்களுக்கு இடையேயும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 27 மாவட்டங்களுக்கு இடையே பேருந்து சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டதால் தொலைதூர பேருந்துகள் இயக்கப்படும். முகக் கவசம் அணிவது, தனிநபர் இடைவெளி ஆகியவற்றை பயணிகள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
23 மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தளர்வுகள்
* பாத்திரக் கடைகள், பேன்ஸி, அழகு சாதனப் பொருட்கள், போட்டோ/ வீடியோ, சலவை, தையல் அச்சகங்கள், ஜெராக்ஸ் கடைகள் காலை 9.00 மணி முதல் மதியம் 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
* செல்பேசி மற்றும் அதனைச் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
* கணினி வன்பொருட்கள், மென்பொருட்கள், மின்னனு சாதனங்களின் உதிரிபாகங்கள் (Computer Hardware, Software, Electronic Appliances Spare Parts) விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
* சாலையோர உணவுக் கடைகளில் பார்சல் சேவை மட்டும் காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை அனுமதிக்கப்படும்.
திருமண போக்குவரத்துக்கு இ-பதிவு அவசியமா? ஊரடங்கில் தளர்வுகள் அறிவிப்பு!
* அனைத்து தனியார் நிறுவனங்கள், 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளும் நிறுவனங்களின் அலுவலங்கள் 50 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
* மாவட்டத்திற்குள் பொது பேருந்து போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, குளிர் சாதன வசதி இல்லாமலும், 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.
* மாவட்டங்களுக்கிடையே பொது பேருந்து போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, குளிர் சாதன வசதி இல்லாமலும், 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.
புதிய ஊரடங்கு: மால், பீச், நகைக்கடை திறக்குமா? முத்தான 10 பதில்கள்!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)