புதிய ஊரடங்கு: மால், பீச், நகைக்கடை திறக்குமா? முத்தான 10 பதில்கள்!
வகை 3-ல் உள்ள மாவட்டங்களில் மட்டும் வணிக வளாகங்கள் (Shopping Complex / Malls) காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். எனினும், வணிக வளாகங்களில் உள்ள உணவகங்களில் பார்சல் உணவு மட்டும் அனுமதிக்கப்படும்.
தமிழ்நாட்டில் சில தளர்வுகளுடன் ஜூலை 5ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மாவட்டங்களில் உள்ள நோய்த் தொற்று பாதிப்பின் அடிப்படையில், ஏற்கனவே மாவட்டங்கள் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன. முன்பு தளர்வுகள் அறிவிக்கப்படாத 11 மாவட்டங்களில் தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை பார்சல் மட்டும் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் துணிக்கடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வகை 1 - (11 மாவட்டங்கள்)
கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள்
வகை 2 - (23 மாவட்டங்கள்)
அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்கள்.
வகை 3 - (4 மாவட்டங்கள்) - சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள்
தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய ஊரடங்கு தொடர்பான சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கான பதில்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது
1. எந்தெந்த மாவட்டங்களில் மத வழிபாட்டுத் தளங்கள் திறக்க அனுமதி?
வகை 3 - (4 மாவட்டங்கள்) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மட்டும் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள், தர்காக்கள் உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டு தலங்களும் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும். அர்ச்சனை, திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கு நடத்த அனுமதி இல்லை.
2. தளர்வுகள் அறிவிக்கப்படாத 11 மாவட்டங்களில் புதிதாக என்னென்ன தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளது?
வகை 1 - மாவட்டங்களில் நோய்த் தொற்று குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில கடைகள் / செயல்பாடுகளுக்கு மாலை 7.00 மணி வரை நேரத் தளர்வு அளிப்பதுடன், கூடுதலாக சில செயல்பாடுகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
3. எந்தெந்த மாவட்டங்களில் கடற்கரைக்குச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வகை 1, 2 மற்றும்3 என அனைத்து கடற்கரைகளிலும், காலை 5 மணி முதல் காலை 9.00 மணி வரை நடை பயிற்சி செய்ய மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது
4. திருமணங்களுக்கான பயண அனுமதிக்கு ஈ-பாஸ் தேவையா?
வகை 2 மற்றும் 3ல் உள்ள மாவட்டங்களுக்கிடையே திருமணம் சார்ந்த போக்குவரத்துக்கு இ-பாஸ்/இ-பதிவு இல்லாமல் பயணிக்கலாம். வகை 1-ல் உள்ள மாவட்டங்களுக்கிடையேயும், வகை 2, 3 ஆகியவற்றில் உள்ள மாவட்டங்களிலிருந்து வகை-1-ல் உள்ள மாவட்டங்களுக்கும் திருமணம் சார்ந்த போக்குவரத்துக்கு இ-பாஸ் பெற்று அனுமதிக்கப்படும். வகை-1ல் உள்ள மாவட்டங்களிலிருந்து வகை-2, 3-ல் உள்ள மாவட்டங்களுக்கு திருமணத்திற்காக பயணிக்கவும் இ-பாஸ் பெறவேண்டும்.
5. நீலகிரி, கொடைக்கானல் பகுதிகளுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா?
வகை 1, 2 அல்லது 3 பிரிவுகளில் இருந்து நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து இ-பாஸ் பெற்று பயணிக்க அனுமதி வழங்கப்படும்.
6. வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகளுக்கு (Housekeeping) இ-பாஸ் அவசியமா?
வகை - 2 மற்றும் 3-ல் உள்ள மாவட்டங்களில் தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகம், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் (Housekeeping) இ-பதிவில்லாமல் செயல்பட அனுமதிக்கப்படும்.
7. எந்தெந்த மாவட்டங்களில் துணிகடைகள், நகைக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது?
வகை 3-ல் உள்ள மாவட்டங்களில் மட்டும் அனைத்துக் துணிக்கடைகள், குளிர் சாதன வசதி இல்லாமலும், ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
8. மால்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதா?
வகை 3-ல் உள்ள மாவட்டங்களில் மட்டும் வணிக வளாகங்கள் (Shopping Complex / Malls) காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். எனினும், வணிக வளாகங்களில் உள்ள உணவகங்களில் பார்சல் உணவு மட்டும் அனுமதிக்கப்படும்.
9. திரையரங்குகள் மற்றும் விளையாட்டுக் கூடங்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதா?
வகை 1, 2 மற்றும் 3 என எந்த மாவட்டங்களிலும் திரையரங்குகள் மற்றும் விளையாட்டுக் கூடங்களுக்கு அனுமதி இல்லை.
10. மாவட்டங்களுக்கிடையே பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா?
வகை 2 மற்றும் 3 மாவட்டங்களுக்கிடையே பொது பேருந்து போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, குளிர் சாதன வசதி இல்லாமலும், 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )