Gokulraj Case: கோகுல்ராஜ் கொலை வழக்கு; யுவராஜின் மேல்முறையீட்டு மனுவின் தீர்ப்பு ஒத்திவைப்பு
கோகுல்ராஜ் கொலை வழக்கின் அனைத்து வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.
கோகுல்ராஜ் கொலை வழக்கின் யுவராஜ் உள்ளிட்டோரின் மேல்முறையீட்டு மனு மீதான அனைத்து வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.
2015-ல் ஓமலூர் கோகுல்ராஜ் ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனையை எதிர்த்து யுவராஜ் உட்பட 10 பேர் மேல்முறையீடு செய்திருந்தனர். வழக்கில் இருந்து 5 பேர் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், கோகுல்ராஜின் தாயாரும் மேல்முறையீடு செய்திருந்தார்.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.
வழக்கு:
கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஆயுத தண்டனை உத்தரவை ரத்து செய்யக்கோரி யுவராஜ், அருண், கிரிதர், ரஞ்சித் உள்ளிட்ட 10 பேரும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மேலும், கோகுல்ராஜ் கொலை வழக்கில் கீழமை நீதிமன்றம் 5 பேரை விடுதலை செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி கோகுல்ராஜின் தாயார் சித்ரா மற்றும் சிபிசிஐடி தரப்பில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.
Also Read: Rajaji Great Grandson: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் ராஜாஜியின் கொள்ளுப்பேரன் - என்ன காரணம்?