Crime : மதம் மாற மறுத்த காதலி.. அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் கசியவிட்ட சைபர் குற்றவாளி கைது..
காதலி மதம் மாற மறுத்ததால், ஒன்றாக அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் கசியவிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காதலி மதம்மாற மறுத்ததால், ஒன்றாக அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் கசியவிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூரை சேர்ந்தவர் இமான் ஹமீப். இவர் கரூரைச் சேர்ந்த பவித்ரா என்ற பெண்ணுடன் இன்ஸ்டாகிராம் மூலமாக பழகி வந்ததாகத் தெரிகிறது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாற, இருவரும் திருப்பூரில் ஒன்றாக தங்கி 2 மாதங்கள் வாழ்ந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து பவித்ராவை மதம் மாற சொல்லி இமான் ஹமீப் வற்புறுத்தி வந்ததாகவும் ஆனால் அதில் உடன்பாடு இல்லாத பவித்ரா அவரிடமிருந்து பிரிந்து சென்றதாகவும் இதனால் ஆத்திரமடைந்த ஹமீப், இருவரும் ஒன்றாக இருந்த போது எடுத்த அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பியதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் பவித்ரா கடந்த 4 ஆம் தேதி திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.
அந்தப்புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த நல்லூர் காவல்துறை ஜாதியை கூறி திட்டியது, பெண்ணை கொடுமை செய்தது, அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இமான் ஹமீப்பை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் மதமாற்ற தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதியப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.