தமிழகம் வந்த இருவரின் மரபணு மாதிரிகள் ஒமிக்ரான் சோதனைக்கு அனுப்பப்பட்டது - மா.சுப்பிரமணியன்
பிரிட்டனில் இருந்து வந்த சிறுமி ஒருவருக்கு கொரோனா உறுதியானது, அவருக்கும் மரபியல் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. இருவருக்கும் ஒமிக்ரான் உறுதியானால் அதை வெளிப்படையாக, அடுத்த விநாடியே தெரிவிப்போம்
ஒமிக்ரான் பாதிப்புகள் உள்ளதா என கண்டறிய தமிழகத்தில் உள்ள அனைத்து விமானநிலையங்களிலும் தடுப்பூ நடவடிக்கைகளை மாநில அரசு தீவிர படுத்தியுள்ளது. இந்நிலையில் சிங்கபூரில் இருந்து திருச்சி வந்த பரிசோதனையின் முடிவில் கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. உடனடியாக அவரை திருச்சிஅரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் தனி அறையில் அனுமதிக்கபட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்- என சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஒமிக்ரான் பாதிப்பு உள்ளதா என கண்டறிய மரபனு பரிசோதனைக்கு மாதிரிகளை ஆய்வகத்திற்கு அனுப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ப்ரிட்டனில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. ஆகையால் ஒமிக்ரான் பாதிப்புள்ள நாட்டிலிந்து தமிழகம் வந்த இருவருக்கு கொரோனா , மேலும் இருவருக்கும் ஒமிக்ரான் தொற்றா என்பதை கண்டறிய அவர்களது மாதிரிகள் , மரபியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.11 நாடுகளில் இருந்து வந்தோர் 7நாள் வீட்டுத் தனிமையில் இருப்பதை உள்ளாட்சி , காவல்துறையினர் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஒமிக்ரான் பாதிப்பற்ற நாடுகளிலிருந்து வருவோரில் 2 விழுக்காட்டினருக்கு விமான நிலையத்தில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயமாக செய்யபட்டு வருகிறது.
மேலும் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர், அப்போது ஒமிக்ரான் குறித்து பதற்றமடைய வேண்டியதில்லை. 10 நாளுக்கு பிறகே பாதிப்பு நிலவரம் முழுவதுமாக தெரியும். அயல் நாட்டிலிருந்து வந்த இருவருக்கும் அறிகுறியற்ற நிலையிலேயே கொரோனா உறுதியானது. ஒமிக்ரான் பாதிப்பு குறித்து மட்டும் பேசி தற்போது நாள்தோறும் 700 என்றளவில் பதிவாகி வரும் டெல்டாவை மறந்து விட கூடாது என சுகாதாரதுறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தென்னாபிரிக்காவில் புதிய தொற்று உருவான மறுநாளே தமிழகத்தில் நடவடிக்கையை தொடங்கிவிட்டோம் என்றார். தமிழகத்தில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் குறிப்பிட்ட 11 நாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு முதலில் காய்ச்சல் பரிசோதனை , அடுத்து ஆர்டிபிசிஆர் சோதனை செய்யப்பட்டது, அதில் நெகடிவ் வந்தாலும் 7 நாள் அவர்கள் வீட்டுத் தனிமையில் இருப்பதை உள்ளாட்சி, காவல் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். மேலும் விமான நிலையத்தில் நேற்று 1868 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பாதிப்பற்ற நாட்டில் இருந்து வருவோருக்கு பிசிஆருக்கான 700 ரூபாய் கட்டணத்தை அரசே செலுத்துகிறது. பாதிப்பு இல்லாத நாடுகளில் இருந்து வருவோர்களில் Random முறையில் 2 சதவீதம் பேருக்கு பரிசோதனை செய்யபட்டு வருகிறது.
வெளிநாட்டில் இருந்து வருவோருக்கு கொரோனா உறுதியான அரசு மருத்துவமனையில் இலவசமாக மருத்துவம் பார்க்கப்படும், ஓமிக்ரானுக்காக 6 மருத்துவமனையில் சிறப்பு படுக்கை வார்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருச்சி, சென்னையில் இருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் தகவல் பரவுகிறது. சிங்கப்பூரில் இருந்து வந்த திருச்சி நபருக்கு கொரோனா உறுதியானது. மேலும் அவருக்கு மரபியல் ரீதியிலான பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. பெங்களூருக்கு அவரது மாதிரியை அனுப்பியுள்ளோம், தற்போது மருத்துவரீதியாக அவருக்கு வெறும் கொரோனா என்றளவில்தான் உள்ளது. வெளிநாட்டிலிருந்து விமானத்தில் வந்த சென்னையில் பிரிட்டனிலிருந்து வந்த சிறுமி ஒருவருக்கு கொரோனா உறுதியானது, அவருக்கும் மரபியல் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. இருவருக்கும் ஒமிக்ரான் உறுதியானால் அதை வெளிப்படையாக , அடுத்த விநாடியே தெரிவிப்போம். இரு விமானத்தில் பயணித்த பயணியர் , பணியாளர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்து பன்னாட்டு விமான நிலையத்திலும் ஒமிக்ரானுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் முதல் தவணையை 80 விழுக்காடு , இரண்டாம் தவணையை 45 விழுக்காட்டினர் செலுத்தியுள்ளனர். இந்தியாவில் அதிகபட்சமாக நாள்தோறும் 1 லட்சத்துக்கு மேல் ஆர்டிபிசிஆர் பரிசோதனை தமிழகத்தில் மேற்கொள்ளப்படுகிறது.