என்னய்யா பித்தலாட்டம் இது? போன் நம்பர் வாங்கி பாஜகவில் இணைத்த கும்பல்! புதுச்சேரியில் அதிர்ச்சி!
நாங்கள் அறக்கட்டையில் இருந்து வருகிறோம் என முத்தியால்பேட்டை பகுதி முழுவதும் ஒவ்வொரு வீடாக சென்று போன் நம்பரை கேட்டு சேகரித்து பாஜகவில் இணைத்த கும்பல்
புதுச்சேரி : புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு தொலைபேசி எண்ணில் நீங்கள் பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினராக சேர்ந்து உள்ளீர்கள் நன்றி என குறுஞ்செய்தி வந்தது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த சில திங்களுக்கு முன் பத்துக்கு மேற்பட்டவர்கள் முத்தியால்பேட்டை பகுதியில் ஒவ்வொரு வீடாக சென்று நாங்கள் அறக்கட்டையில் இருந்து வருகிறோம். உங்களுக்கு உங்கள் வீட்டில் நல்ல காரியங்கள் கெட்ட காரியங்கள் எது நடந்தாலும் உங்களுக்கு ரூபாய் பத்தாயிரம் வழங்கப்படும். மேலும் தீபாவளி போன்ற விசேஷ நாட்களில் உங்களுக்கு பரிசு பொருள்களை வழங்கப்படும். நாங்கள் அறக்கட்டையில் இருந்து வருகிறோம். எனவே உங்கள் தொலைபேசி எண்ணை கொடுங்கள் என ஒரு கும்பல் முத்தியால்பேட்டை பகுதி முழுவதும் ஒவ்வொரு வீடாக சென்று போன் நம்பரை கேட்டு சேகரித்துள்ளது.
இல்லத்தரசிகளும் இதனை நம்பி அவர்களும் தொலைபேசி எண்ணை கொடுத்துள்ளனர். அந்த தொலைபேசியில் இருந்து பிஜேபி உறுப்பினர் சேர்க்கைக்காக கொடுக்கப்பட்ட நம்பருக்கு மிஸ்டு கால் கொடுக்கின்றனர் அந்த கும்பல். உடனடியாக கொடுத்தவுடன் நீங்கள் பிஜேபி அடிப்படை உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளீர்கள் என குறுஞ்செய்தி SMS வருகின்றது.
உடனடியாக அந்த கும்பல் அங்கிருந்து ஏதோ கட்டுகதையை கூறிவிட்டு அந்த வீட்டை விட்டு வெளிவந்து விடுகின்றனர். குறுஞ்செய்தியை பார்த்தவுடன் இல்லத்தரசிகள். நாங்கள் நம்பி தொலைபேசி எண்ணை கொடுத்தோம் எங்களுக்கு இதுபோன்ற அடிப்படை உறுப்பினர் குறுஞ்செய்தி வருகிறது. நாங்கள் எந்த கட்சியில் இருக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் எங்களுக்கு யார் பிடிக்கிறதோ அவர்களுக்கு தான் எங்கள் ஓட்டு.
இதுபோன்று நம்பி போன் நம்பரை வாங்கிக்கொண்டு இதுபோன்று செய்யலாமா? என பாரதிய ஜனதா கட்சியினரை அப்பகுதி மக்கள் சரமாரியாக கேள்வி கேட்கின்றனர். முத்தியால்பேட்டை தொகுதியில் தற்போது பிரகாஷ் குமார் எம்.எல்.ஏ சுயேசையாக வெற்றி பெற்று தற்போது அவர் என்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய தொகுதியில் இதுபோன்று நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது