செங்கோட்டையன் திமுகவில் இணைகிறாரா ? - அமைச்சர் ரகுபதி சொன்ன பதில்
“செங்கல் எடுக்க வேண்டும் என்றால் வேற எங்கேயாவது போய் செங்கல் எடுக்கச் சொல்லுங்கள் , அறிவாலயத்தில் உள்ள செங்கலை கை வைக்க கூட அவரால் முடியாது” - அமைச்சர் ரகுபதி

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் ;
வெல்வோம் 200 படைப்போம் வரலாறு , 2026 தேர்தலில் 200 இலக்கு , அதன் தொடக்கமே ஈரோடு கிழக்கு என்று முழக்கமிட்டு வரும் முதலமைச்சர் ஆட்சியில் ஒவ்வொரு திட்டத்தின் மூலமாக குடும்பத்தில் ஒருவருக்கு பலன் சென்றடைந்து இருக்கிறது. பலன் கிடைக்காத குடும்பமே இல்லை என்ற அளவிற்கு உள்ளது.
அதிமுக கலகலத்து கொண்டு இருக்கிறது
கடந்த முறை செய்தியாளர்களை சந்தித்தபோது அதிமுக எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் இல்லை என்பதை அங்கு இருக்கிறவர்கள் பேசுபவர்களிடம் இருந்து தெரிந்து கொள்ளலாம் என கூறினேன். ஒரு நண்பர் என்னிடத்தில் சொன்னார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசும்போது, கட்சித் தலைவர் எடப்பாடி, வேலுமணி, தங்கமணி எல்லோரும் எனக்கு ஜூனியர் தான் என சொன்னதாக தகவல் கிடைத்திருக்கிறது எந்த அளவுக்கு ஆதங்கத்தோடு அங்கே இருக்கிறார் என்பதும் அங்கு இருக்கக் கூடிய சீனியர்கள் எந்த ஆதங்கத்தோடு இருக்கிறார்கள் என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும். அதிமுக கலகலத்துக் கொண்டிருக்கிறது. அதிமுக வாக்குகள் ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் முதல் முறையாக இரட்டை இலைக்கே வாக்களித்தவர் முதல் முறையாக உதயச்சூரியன் சின்னத்திற்கு வாக்களித்திருக்கிறார்கள் என்பதையும் சொல்லி இருக்கிறோம்.
பொதுவாக கருத்துக்கணிப்பை நம்புவது கிடையாது என்று சொன்னாலும் கூட அதற்கும் வலிமை உண்டு என்ற எண்ணத்தில் அதையும் காரணியாக பார்க்க வேண்டும் சமீபத்தில் இந்திய டுடே பத்திரிகை மற்றும் சி ஓட்டர்ஸ் இணைந்து வோட் ஆப் நேஷன் கருத்துக்கணிப்பை நடத்தியது. அந்த கருத்துக்கணிப்பில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் இன்று நாடாளுமன்ற தேர்தல் நடந்தால் திமுக கூட்டணி வெல்லும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 47 சதவீதம் வாக்குகள் பெற்ற நிலையில் 52% வாக்குகளை பெறும் அதே போல அதிமுக 23 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக குறையும் என்ற கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.
எல்லாவற்றையும் சேர்த்து சொல்லியிருக்கிறார்கள் அதைச் சொல்ல விரும்புகிறேன். எல்லாரும் சேர்ந்து வந்தாலும் தனித்து வந்தாலும் திமுக ஆட்சிக்கு ஆதரவுகளைதான் இருக்கிறது எதிர்ப்பு அலை இல்லவே இல்லை. தமிழக மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஏதாவது ஒரு சம்பவத்தை சுட்டி காண்பித்து அதை மிகைப்படுத்தி குறைகள் இருக்கிறது என கூறுகிறார்கள் தவிர தமிழக மக்கள் அனைவரும் திட்டத்தினால் நன்மை கிடைத்திருக்கிறது பலன் கிடைத்திருக்கிறது எனவும் பழைய ஆட்சியில் எந்த பலனும் இல்லை இந்த ஆட்சியில் நன்மை கிடைத்திருக்கிறது எனவும் வரவேற்றுக் கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்தார்.
விரைவில் பட்டாக்கள் வழங்கக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது தமிழக மக்களின் நிலையை புரிந்து கொண்டு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது. அதிமுக கூட்டணி கலகலந்து கொண்டிருக்கிறது 23 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக வாக்கு வங்கி சரிந்து இருக்கிறது. புதிய கட்சிகள் மற்றும் என்டிஏ கூட்டணி 21% தான் வருகிறது எங்களை பொறுத்தவரையில் 52% வரை இன்னும் உயர்த்துவதற்கான பணிகளை மேற்கொள்வோம் என கூறினார்.
திமுகவிற்கு - அதிமுகதான் எதிரி
தமிழகத்தில் தொடர்ந்து திமுக கூட்டணி மீண்டும் தொடரும் மீண்டும் தமிழகத்தை ஆளக்கூடிய பொறுப்பை முதலமைச்சரிடம் தருவார்கள். 47 சதவீதத்திலிருந்து 52 சதவீதமாக அதிகரித்துள்ளது. கருத்துக்கணிப்பு முடிவுகளை குறிப்பிட்ட அளவு ஏற்றுக் கொள்ள வேண்டும். கருத்துக்கணிப்புகள் ஒரு பாடம் அதற்கு ஏற்றார்போல் செயல்பட வேண்டும். வாக்கு வங்கியை அதிகரிக்க தொடர்ந்து செயல்படுவோம் என தெரிவித்தார்.
திமுகவுக்கு எதிரிகளை இல்லை என எப்போதும் சொல்வதில்லை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கண்ணுக்குத் தெரிந்த தூரம் வரை எதிரிகளே இல்லை என கூறுவார் நாங்கள் எதிரிகள் இல்லை என சொல்லவில்லை எதிரிகள் இருக்கிறார்கள் அவர்களுக்கு வாக்கு வாங்கி இருக்கிறது என தான் கூறுகிறோம். 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு அதிமுக தான் எதிரி என தெரிவித்தார்.
வேற எங்கையாவது போய் செங்கல் எடுங்க
செங்கல் எடுக்கனும்னா , வேற எங்கேயாவது போய் செங்கல் எடுக்கச் சொல்லுங்கள் எனவும் அறிவாலயத்தில் உள்ள செங்கலை கை வைக்க கூட அவரால் முடியாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்விக்கு பதில் அளித்தார்.
ஆட்சியில் இருக்கும் போது அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்துவது இயற்கை தான். நாங்கள் தவறு செய்யவில்லை தவறுக்கு இடம் கொடுக்காமல் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
செங்கோட்டையன் திமுகவில் இணைய உள்ளாரா என்ற கேள்விக்கு ,
அப்படி சொல்லவில்லை அதிருப்தியில் செங்கோட்டையன் உள்ளார். திமுகவில் இணைய போகிறார் என சொல்லவில்லை தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அவரின் மனக் குமுறலை சொல்லி இருக்கிறார். நான் சீனியர் ஜூனியர் என்று சொல்லி இருக்கிறார். அது உண்மை தானே என தெரிவித்தார்.
பாலியல் குற்றச்சாட்டில் ஐபிஎஸ் மீது வழக்கு பதிவு குறித்தான கேள்விக்கு ,
யார் குற்றம் சாட்டப்பட்டாலும் போதுமான ஆதாரங்கள் இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுதான் சட்டம். யார் தைரியமாக வந்து சொன்னாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழக வெற்றிக் கழக கட்சிக்கு 20 சதவீதம் வாக்கு வங்கி உள்ளது என பிரசாத் கிஷோர் கூறியது குறித்தான கேள்விக்கு ,
பிரசாந்த் கிஷோர் தேர்தல் வியூக வகுப்பாளராக உள்ளார். அதன் காரணத்தினால் அப்படி சொல்லி இருக்கிறார். அந்த அளவுக்கு வாக்கு வங்கி இருப்பதாக தெரியவில்லை.
சாதி வாரி கணக்கெடுப்பு மத்திய அரசு சப்ஜெக்ட் , அவர்கள் எடுத்தால் தான் ( Proper ஆக ) இருக்கும் நாங்கள் சாதிவாறு கணக்கெடுப்பு எடுத்தோமானால் சட்ட வலிமை கிடையாது பல பிரச்சினைகள் எதிர் கொள்ள வேண்டி வரும். சட்டபூர்வமானது கிடையாது. மத்திய அரசை சாதிவாரி கணக்கெடுப்பு எடுங்கள் வலியுறுத்துகிறோம் சாதி வாரி கணக்கெடுப்புக்கு நாங்கள் எதிரி அல்ல நாங்கள் எடுப்பது சட்டப்படி பூர்வீகமாக செல்லாது எடுத்து வைத்துக் கொண்டு என்ன பண்ணுவது அதை அமல்படுத்த முடியாது என தெரிவித்தார்.




















