மேலும் அறிய

புதுச்சேரியில் இருந்து பெங்களூர், ஹைதராபாத்திற்கு தொடங்கியது விமான சேவை

புதுச்சேரி: இன்று முதல் புதுச்சேரியில் இருந்து பெங்களூர் மற்றும் ஹைதராபாத் நகரங்களுக்கு விமான சேவை தொடங்கியது.

புதுச்சேரி: இன்று முதல் புதுச்சேரியில் இருந்து பெங்களூர் மற்றும் ஹைதராபாத் நகரங்களுக்கு விமான சேவை துவங்கியது. லாஸ்பேட்டை, விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு, ஐதராபாத் பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்த ஸ்பைஸ்ஜெட் விமான சேவை கடந்த மார்ச் மாத இறுதியில் நிறுத்தப்பட்டது. புதுச்சேரியில் இருந்து மீண்டும் விமான சேவையை தொடங்க, இண்டிகோ நிறுவனம் முன்வந்து அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

விமான நிலையத்தில் இண்டிகோ நிறுவன சேவைக்காக, பிரத்யேக அலுவலக அறைகள், தொழில் நுட்ப அறைகள், ஊழியர்கள் பணியாற்றுவதற்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, விமான சேவை தொடங்க அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்துள்ளது. புதுச்சேரியில் இன்று முதல் மீண்டும் விமான சேவை துவங்கப்பட உள்ளது என அறிவித்தது. அதன்படி தினசரி காலை, 11:10 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்படும் விமானம் மதியம், 12:25 மணிக்கு, புதுச்சேரியை வந்தடையும்.

மதியம் 12:45 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்படும் விமானம் மதியம், 2:30 மணிக்கு ஐதராபாத் சென்றடையும். ஐதராபாத்தில் இருந்து மாலை 3:05 மணிக்கு புறப்படும் விமானம், மாலை 4:50 மணிக்கு புதுச்சேரி வந்தடையும். புதுச்சேரியில் இருந்து மாலை 5:10 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 6:35 மணிக்கு பெங்களூரு சென்றடையும். இதில், 70 பேர் பயணம் செய்ய முடியும். இதையொட்டி, பயணிகளின் லக்கேஜ்களை எடுத்துச் செல்லும் புதிய டிராலிகள் விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மதுரை - பினாங்கு விமான சேவை; நாளை முதல் இண்டிகோ துவக்குகிறது

மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை வழி மலேசியாவின் பினாங்கு மாநிலம் செல்வதற்கான விமான சேவையை டிசம்பர் 21 முதல் இண்டிகோ நிறுவனம் துவங்குகிறது. மதுரையில் இருந்து இலங்கை, துபாய் மற்றும் சிங்கப்பூருக்கு நேரடி விமான சேவை உள்ளது. மலேசியா, சார்ஜா, குவைத், அபுதாபி செல்லும் விமான நிறுவனங்கள் இருவழி ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயாராக இருந்தாலும் மத்திய விமான அமைச்சகம் அனுமதி வழங்காததால் பிற நாடுகளின் இருவழி சேவை மதுரையில் துவங்கப்படவில்லை. பகல்நேர கஸ்டம்ஸ் விமான தளமாக மட்டுமே செயல்பட்டு வந்தது.

அக்டோபர் 1 முதல் மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்படும் என மத்திய விமான அமைச்சகம் அறிவித்ததை அடுத்து தற்போது மதுரை - சென்னை, சென்னை - மதுரைக்கு இரவு நேர விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் மதுரையில் இருந்து மலேசியாவின் பினாங்கு மாநிலம் செல்வதற்கான விமான சேவையை டிச.,21 முதல் இண்டிகோ நிறுவனம் துவங்க உள்ளது.

மதுரையிலிருந்து இரவு 9:05 மணிக்கு புறப்படும் இண்டிகோ விமானம் மலேசிய நேரப்படி காலை 8:30 மணிக்கு பினாங்கு செல்கிறது. மறு மார்க்கத்தில் மலேசிய நேரப்படி காலை 9:30 மணிக்கு புறப்பட்டு இந்திய நேரப்படி மதியம் 3:15 மணிக்கு மதுரை வந்தடைகிறது. டில்லி, கோல்கட்டாவில் இருந்து வரும் விமானங்களுடன் பினாங்கு விமானம் இணைக்கப்பட்டுள்ளதால் மற்ற நகரங்களில் இருந்து வரும் பயணிகள் சென்னை, மதுரைக்கு இணைப்பு விமானமாக இந்த பினாங்கு விமானத்தை பயன்படுத்தி கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

மதுரையிலிருந்து பினாங்கிற்கு நேரடி விமான டிக்கெட் வழங்கப்படுவதோடு பயணிகளின் உடைமைகளை நேரடியாக பினாங்கிற்கு அனுப்பும் வசதியும் கிடைக்கும். சிவகங்கையின் காரைக்குடி செட்டிநாட்டு பகுதியைச் சேர்ந்த பலர் பினாங்கில் பல்வேறு தொழில் வணிகத்தில் ஈடுபட்டுள்ளதால் மதுரை - பினாங்கு விமான சேவை அவர்களுக்கும் வசதியாக இருக்கும்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Viduthalai 2 Review :  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review : வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Viduthalai 2 Review :  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review : வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
Women Mentality: ”பேசிக்கிட்டே இருக்கா மச்சி” மனைவிகளை பற்றி புலம்பும் கணவன்கள் - பெண்களின் அதீத திறமைகள் தெரியுமா?
Women Mentality: ”பேசிக்கிட்டே இருக்கா மச்சி” மனைவிகளை பற்றி புலம்பும் கணவன்கள் - பெண்களின் அதீத திறமைகள் தெரியுமா?
’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!
’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!
ரெட் லைட் ஏரியாவில் 900 தமிழ் பெண்கள்! பம்பாயை அலறவிட்ட தமிழக போலீஸ் - 90ல் நடந்தது என்ன?
ரெட் லைட் ஏரியாவில் 900 தமிழ் பெண்கள்! பம்பாயை அலறவிட்ட தமிழக போலீஸ் - 90ல் நடந்தது என்ன?
Breaking News LIVE : ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா காலமானார்
Breaking News LIVE : ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா காலமானார்
Embed widget