ஊழலை கண்டித்து ஒத்தையில் உண்ணாவிரதம்; கரூரில் விசிக நகரச் செயலாளர் கைது
குளித்தலையில் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் முறைகேடு நடந்துள்ளதாக கவன ஈர்ப்பு கடிதம் மூலம் மனு அளித்துள்ளார்.
கரூரில் ஊழலை கண்டித்து ஒத்தையில் உண்ணாவிரதம் நடத்திய விடுதலை சிறுத்தை கட்சி நகரச் செயலாளர் கைது செய்யப்பட்டார்.
கரூர் மாவட்டம் குளித்தலை நகரத்தில் பிரகாஷ் என்பவர் விடுதலை சிறுத்தை கட்சியின் நகர செயலாளராக உள்ளார். இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குளித்தலையில் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் முறைகேடு நடந்துள்ளதாக கவன ஈர்ப்பு கடிதம் மூலம் மனு அளித்துள்ளார்.
இந்த மனுவின் மூலம் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கோரி, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த விடுதலை சிறுத்தை கட்சியின் குளித்தலை நகர செயலாளர் பிரகாஷ், ஒத்தையில் நின்று கொண்டு குளித்தலை நகராட்சியில் நடந்த ஊழல் மீது நடவடிக்கை எடுக்கவும், தூய்மை பாரத திட்டத்தின் கீழ் முறைகேடு நடந்துள்ளதாகவும்,
சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், இந்த முறைகேட்டில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரியும் ஒத்தையில் நின்று பேனரை பிடித்துக் கொண்டு மாவட்ட ஆட்சியர் வளாகம் முன்பு உண்ணா நிலை போராட்டத்தை தொடங்கினார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரை கைது செய்து அழைத்து சென்றனர். விடுதலை சிறுத்தை கட்சியில் இருந்து நகரச் செயலாளர் மட்டும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.