மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலி மந்திரவாதி... உடந்தையாக இருந்த தாய்.. நாகர்கோவிலில் பகீர்
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரையும், அவருக்கு உடந்தையாக இருந்த தாயாரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரையும், அவருக்கு உடந்தையாக இருந்த தாயாரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
நாகர்கோவில் மறவன்குடியிருப்பை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், நாகர்கோவில் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவரது தந்தை வெளிநாட்டில் இருக்கிறார்.
இதையும் படிக்க: கல்வி நிலையங்களில் தேசிய கொடி ஏற்றுவது எப்படி?...வெளியான வழிகாட்டு நெறிமுறைகள்
மாணவி, தாயார் மற்றும் சகோதரருடன் வசித்து வருகிறார். மாணவியின் தாயாருக்கு அடிக்கடி கால் வலி வந்துள்ளது. இது தொடர்பாக சிகிச்சை அளித்தும் குணமாகாதால், இது மாந்திரீக குறைபாடு என அக்கம் பக்கத்தினர் கூறினர்.
இதையடுத்து மந்திரவாதி சிவக்குமார் (38) என்பவரின் தொடர்பு மாணவியின் தாய்க்கு கிடைத்தது. கால் வலியை குணமாக்க பூஜை நடத்துவதாக கூறி சிவக்குமார் அடிக்கடி மாணவியின் வீட்டுக்கு வந்துள்ளார். அவரும், மாணவியின் தாயாரும் தனிமையில் இருக்க தொடங்கினர். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் போதையில் இருந்த சிவக்குமார் வீட்டில் இருந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து மாணவி வெளிநாட்டில் உள்ள தந்தையிடம் கூறினார். உடனடியாக அவர் ஊருக்கு புறப்பட்டார். கணவர் வருவதை அறிந்த மாணவியின் தாயார் வீட்டில் இருந்த ஆதார் கார்டு, ரேஷன் கார்டு மற்றும் வங்கி புத்தகம், ஏடிஎம் கார்டு ஆகியவற்றுடன் மாயமாகி விட்டார்.
இதையும் படிக்க: மன வருத்தத்தில் 63 ஒரு ரூபாய் நாணயங்களை விழுங்கிய நபர்... 2 நாட்களாக போராடிய மருத்துவர்கள்!
இது தொடர்பாக கோட்டார் போலீசில் புகார் அளித்த போது சிவக்குமாருடன் தான் செல்வேன் என மாணவியின் தாயார் கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவி, சிவக்குமார் தன்னை பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக தற்போது நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து சிவக்குமார் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மாணவியின் தாயாரை கைது செய்தனர்.
பெற்ற தாயின் உடந்தையோடு போலி சாமியார், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்திருப்பது நாகர்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்